news Breaking News
clock

ரூ.57 கோடியில் வணிக வரி, சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்: ஸ்டாலின் திறந்தார்

ரூ.57 கோடியில் வணிக வரி, சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்: ஸ்டாலின் திறந்தார்



சென்னை, பிப்.


வணிகவரி துறை சார்பில் ரூ.34.98 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 வணிக வரி அலுவலகக் கட்டடங்கள், பதிவுத்துறை சார்பில் ரூ.22.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் திருப்பூர் பதிவு மாவட்டத்தில் பொங்கலூர், தாம்பரம் பதிவு மாவட்டத்தில் வண்டலூர் மற்றும் கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டத்தில் வாணாபுரம் ஆகிய மூன்று புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


வணிகவரித் துறை சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம், அருப்புக்கோட்டையில் உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம், மன்னார்குடி, நாகப்பட்டினம் மற்றும் கரூர்-4 ஆகிய இடங்களில் மாநிலவரி அலுவலர் அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் 34 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 வணிகவரித்துறை கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


தஞ்சாவூர் மாவட்டம் – சுவாமிமலை மற்றும் பாபநாசம், திருவாரூர் மாவட்டம் – நன்னிலம் மற்றும் நீடாமங்கலம், நாமக்கல் மாவட்டம் – நாமக்கல் 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம்,


ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை, திண்டுக்கல் மாவட்டம் – நிலக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் – எலவனாசூர்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் - முறப்பநாடு தென்காசி மாவட்டம் – பண்மொழி, மயிலாடுதுறை மாவட்டம் – சீர்காழி ஆகிய இடங்களில் 22 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.


முதலமைச்சர் மொத்தம் 57 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுத் துறைக்கான புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.


கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 40 கிராமங்களில் 18 கிராமங்களை பிரித்து அந்த 18 கிராமங்களை உள்ளடக்கி தாம்பரம் பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட வண்டலூர் சார்பதிவாளர் அலுவலகம்;


2025-–2026–ம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை மாணியக் கோரிக்கையின் அறிவிப்பை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டம், வாணாபுரம் வருவாய் வட்டத்தில் உள்ள 85 கிராமங்களில் 32 கிராமங்களை பிரித்து அந்த 32 கிராமங்களை உள்ளடக்கி கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட வாணாபுரம் சார்பதிவாளர் அலுவலகம்; திருப்பூர் பதிவு மாவட்டம், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 39 கிராமங்களில் 11 கிராமங்களை பிரித்து அந்த 11 கிராமங்களை உள்ளடக்கி திருப்பூர் பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட பொங்கலூர் சார்பதிவாளர் அலுவலகம்;


ஆகிய புதிதாக உருவாக்கப்பட்ட 3 சார்பதிவாளர் அலுவலகங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். இப்புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்படுவதன் மூலம் பொதுமக்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சேவைகளை அளிக்க இயலும்.


நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், பி.மூர்த்தி, டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News