news Breaking News
clock

ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக நீடிக்கும் - ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக நீடிக்கும் - ரிசர்வ் வங்கி



புதுடெல்லி,


2025-ம் ஆண்டு முழுவதும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை படிப்படியாக குறைத்து வந்தது. டிசம்பர் 2025இல் 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைத்து 5.25 சதவீதம் வரையில் கொண்டு வந்தது.


ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கும் வட்டி விகிதம் ஆகும். இது குறைந்தால் நாம் வாங்கும் வீடு, கார், கல்வி கடன்களின் வட்டி விகிதமும் குறையும்.


ரெப்போ விகிதம் மாற்றமின்றி இருந்தால் வங்கி கடன் வட்டி விகிதங்கள் உயராமல் இருக்கும். வீடு, கார், கல்வி கடன் வட்டி நிலையாக இருக்கும்.


இந்நிலையில், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 5.25 சதவீதமாக நீடிக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா கூறியுள்ளார்.


பணவீக்கம் அதிகரிக்க தொடங்கியதால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 3 நாள் நிர்வாகக் குழு கூட்டத்துக்கு பிறகு கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News