ரோஜா

ரோஜா

 🌹சொல்லுமா?

காலேஜில் அன்று ஃபேர்வெல் டே. பார்ட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. எல்லா மாணவர்களும் கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிட்டோம் என்ற சந்தோஷம் இருக்க, மறுபுறம் நண்பர்கள் அனைவரும் பிரியும் நேரம். மனம் சற்று கனத்தது. வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வுக்கு அவர்கள் தயாராக வேண்டும். அந்த வருத்தமும் மனதில் ஓரத்தில் உள்ளது. இருப்பினும் ,கல்லூரி கால இனிமையான நாட்களை அசைப்போட்டு ,ஆடி, பாடி சந்தோஷத்துடன் இருந்தார்கள். ஒவ்வொருவரும் "தான் முதல் நாளில் கல்லூரியில் நுழைந்த அனுபவத்தினை" பகிர்ந்து கொண்டிருந்தார்கள். முரளியின், மீராவும் தனித்தனியே தன்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவருமே கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரே வகுப்பில் படித்தாலும் "எலியும், பூனையும் போல்" இல்லை ...இல்லை ... "டாம் அண்ட் ஜெர்ரி" போல், இப்படி சொன்னால் தான் நன்றாக இருக்கும். எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இருவரும் நன்றாக படிக்கக் கூடியவர்கள். இருவருக்கும் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து விட்டது .விழா முடிந்தவுடன் இன்னும் சற்று நேரத்தில் அனைவரும் வீட்டிற்கு செல்ல வேண்டும். வகுப்பறையில் அவர்கள் அடித்த லூட்டியை மறக்க முடியவில்லை. அதனால் வகுப்பை விட்டு பிரியவும் மனசில்லாமல், ஒருவருக்கொருவர் தங்களுடைய மனதில் இருக்கும் ஏக்கங்களை பகிர்ந்து கொண்டனர். அப்பொழுது முரளியின் நண்பன் பிரகாஷ் வந்தான். டேய் முரளி இப்பவாவது உன் மனதில் உள்ளதை மீராவிடம் சொல்லிவிடு. இல்லை என்றால் உனக்கு வாய்ப்பே கிடைக்காது. அவள் வெளியூருக்கு வேலைக்குச் சென்று விடுவாள் .நீயும் வேறு ஊருக்கு வேலைக்கு சென்று விடுவாய். இதுதான் கடைசி வாய்ப்பு .போடா... போ, போய் சொல்லு என்று பிரகாஷ் கூறினான். தயக்கமா இருக்குடா என்றான் முரளி .அவ வேற கோவக்காரி எப்படி ரியாக்ட் பண்ணுவாளோனு தெரியல டா? என்றான். அப்படியா ,சரி ..சரி வா கிளம்பலாம். எல்லோரும் கிளம்பிட்டாங்க. நாமும் போகலாம் என்றான். பிரகாஷ், நீ போடா நான் இன்னும் கொஞ்ச நேரம் கிளாஸில் உட்கார்ந்துட்டு வரேன். இனி வகுப்புக்குள்ள வர முடியாது இல்ல என்றான் .உடனே பிரகாஷ் வெளியே சென்று விட்டான். முரளி போர்டையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். அதில் விழாவிற்காக மீரா அழகிய ரோஜாப்பூ ஒன்றை படமாக வரைந்திருந்தாள் . அந்த ரோஜாப்பூ முரளியை பார்த்து சிரித்தது .உடனே முரளி சாக்பீஸ் எடுத்து அந்த ரோஜாப்பூவின் காம்பின் கீழே தன்னுடைய பெயரின் முதல் எழுத்தான "M" என்று எழுதிவிட்டு வந்துவிட்டான். அதை ஜன்னல் வழியாக மீரா பார்த்து விட்டாள். உடனே கதவின் அருகே மறைந்து கொண்டு நின்றிருந்தாள். மீராவின் முதல் எழுத்தும்" M "தானே! அவன் வெளியே வந்த போது ,கதவின் அருகில் நின்றவளை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். மனது பட... பட ..வென்று அடித்துக் கொண்டது. அவன் விறு ..விறு ..என அவளைத் தாண்டி சென்றான். நண்பனுடன் பேசுவதற்காக பாக்கெட்டில் இருந்து ஃபோனை எடுக்க கைவிட்ட பொழுது பாக்கெட்டில் போன் இல்லை. அடடா !! வகுப்பிலேயே ஃபோனை வைத்துவிட்டு வந்து விட்டேனே ,என்று மறுபடியும் ஃபோனை எடுப்பதற்காக முரளி வகுப்பிற்கு வந்தான். அதே ஜன்னல் வழியாக அவன் பார்த்தான். உள்ளே மீரா போர்டில் உள்ள படத்தை தன்னுடைய ஃபோனில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள். அவன் அங்கேயே நின்று விட்டான். மீரா வெளியே வந்த போது முரளி நிற்பதை பார்த்து அவளுக்கு ஷாக் ஆயிடுச்சு. சமாளித்துக் கொண்டு சிறு புன்னகையுடன் அவள் சென்றாள் . வகுப்பறையின் உள்ளே சென்ற முரளி தன் ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். நண்பன் பிரகாஷ் ஃ போன் செய்தான் எங்கடா இருக்க? சீக்கிரமா வா. எல்லாரும் உனக்காகத்தான்" கேட்" வாசல்ல காத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பை..பை.. சொல்லிவிட்டு கிளம்பிடுவோம். பேசி முடித்தவுடன் பார்த்தான். ஏதோ மெசேஜ் வந்திருக்கிறது. அதை ஓபன் செய்து பார்த்தான் . போர்டில் உள்ள போட்டோ இவனோட போனிலும் இருந்தது முரளிக்கு ரொம்ப சந்தோஷம். ஏய்!! என்று கத்தினான். உடனே அவன் திருப்பி அந்த ரோஜா படத்தை மீராவுக்கு அனுப்பினான். படத்தில் உள்ள முதல் எழுத்தான" M "இரண்டு பேரையும் இணைத்தது சொல்லாமலே புரிந்தது .ரோஜாப்பூ இனிமேல் சொல்லும்.🩷🩷🩷🩷🩷🩷🩷🩷

எம் .எல் .பிரபா

ஆதம்பாக்கம்.

சென்னை 88

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%