news Breaking News
clock

வங்கதேசத்துக்கு ஆதரவு; இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கிறோம்: பாக். பிரதமர்

வங்கதேசத்துக்கு ஆதரவு; இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கிறோம்: பாக். பிரதமர்


பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வங்கதேசத்துக்கு ஆதரவாக, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாகக் கூறியுள்ளார்.

வங்கதேசத்துக்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணியை டி20 உலகக் கோப்பையில் இணைத்த ஐசிசியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கூறியதாவது:


டி20 உலகக் கோப்பையில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். அது என்னவென்றால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம். ஏனெனில் களத்தில் எந்த விதமான அரசியலும் இருக்க வேண்டாம் என நினைக்கிறோம்.

நாங்கள் முழுமையாக வங்கதேசத்துக்கு ஆதரவாக நிற்கிறோம். இதுதான் சரியான முடிவு என்றும் நினைக்கிறோம். நாங்கள் வங்கதேசத்துடன் நிற்கிறோம் எனக் கூறியுள்ளார்.

அயர்லாந்து உடனான பாகிஸ்தானின் பயிற்சி ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என வென்ற பாகிஸ்தான் நல்ல ஃபார்மில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News