வருந்தி அழைத்தாலும்

வருந்தி அழைத்தாலும்


அறுசீர் மண்டிலம்.


எவ்வளவு வருத்தமோடு

அழைத்தாலும்

எதுவுமே வராதவை

வாராவே!

எவ்வளவு வெறுத்தாலும்

போவென்று

என்றுமே

சொன்னவை போகாவே!

அவ்வளவும் ஊழ்வினையால்

உட்பட்டு

அத்தனைச் செயல்களும்

கண்டிடுமே!

இவ்வளவே நமக்கென்று

ஒதுக்கிட்ட

எல்லாமே நமக்காக

வந்திடுமே!


              .(வேறு)

நேரிசை வெண்பா!


வாவென்(று)

அழைத்தாலும்

வண்மையே

வாராதே!


தாவென்று

கேட்டாலும்

தக்கதேதும்...

மேவும்


வகையிலே

வாராதே!

வண்ணமாய்ப்

போகும்


தகவுமே

போகாதே

தாம்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%