நேரிசை வெண்பா!
தேசியம்
என்னுடைத்
தேர்ந்த
உடலேயாம்
ஆசையாய்த்
தெய்வீகம்
அன்பான....
நேசவுடல்!
சாதி
எதிர்ப்பாளர்
சந்தனமாய்த்
*தேவரே*!
ஓதினார்
நீதியை
ஓர்!
மக்களைச்
சார்ந்திட்ட
மாண்புத்
தலைவராம்!
தக்கநல்
பேச்சர்
தனித்துணிச்சல்....
மிக்கவே
பெற்றவர்
*முத்துராம*
*லிங்கர்*
பெருமையாய்
உற்றார்
தியாகியென்றே
ஓர்!
தேசியம்
காத்திட்ட
செம்மலே
*தேவராம்!*
பாசமும்
பற்றுமே
நாட்டிலே...
ஓசையின்றி
வைத்தார்!
விடுதலைப்
போராட்ட
வீரராம்!
தைத்தாரே
நெஞ்சில்
தகவு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%