வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 15.10.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 15.10.25


அன்புடையீர் 


வணக்கம். 15.10.25 அன்றைய புதன்கிழமை புதிதாக விடிய கையில் தமிழ்நாடு இ பேப்பரின் ஒவ்வொரு பக்கமும் அலை பேசியில் வந்து என்னை ஆர்வமுடன் படிக்க வைத்தது. அதில் வந்த அத்தனை தகவல்களையும் விரும்பி படித்தேன்.


நலம் தரும் மருத்துவம் பகுதி, தினம் ஒரு தலைவர்கள் என்று என் எம் பெரேரா வரலாறு, தல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த அனைத்து தகவல்களும் மேலும் க்ரைம் கார்னர் விளையாட்டுச் செய்திகள் என்று பக்கத்துக்கு பக்கம் அனைத்து தகவல்களையும் புத்தம் புதிதாக புதன்கிழமை படித்தவுடன் பூரிப்பு வந்து உற்சாகமாக அன்றைய நாளினை தொடங்க வைத்தது.


சுற்றுலா பக்கத்தில் மட்டும் என்ன தேவையில்லாத செய்திகளாக வரும். அதிலும் நாகப்பட்டினத்தில் சுற்றி பார்க்க வேண்டிய ஏழு இடங்களை குறிப்பிட்டு அருமையான தகவல்களை சொன்னவுடன் உற்சாகமாக சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தினை உண்டாக்கிய பக்கம் அது.


அள்ள அள்ளக் குறையாத திகட்டாத செய்திகளை தினமும் விடியலில் கொடுத்து உற்சாகமாக ஒவ்வொரு நாளையும் தொடங்க உதவும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். என்றென்றும் நீங்கள் இதுபோல் சிறந்து மென்மேலும் பல வளர்ச்சிகளைக் காண இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். 


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%