
வணக்கம் சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டசபைக்கே உள்ளது என்ற முதல் பக்க தலைப்பு செய்தியுடன் தொடங்கிய தமிழ்நாடு இ பேப்பர்.காமின் ஒவ்வொரு பக்கத்திலும் அருமையான சிறுகதைகள் கவிதை பகுதிகள் என்று இன்பமுடன் அறுசுவை உணவை அருந்தி மகிழ்ந்தேன்.
திருக்குறள் மற்றும் அந்தப் பக்கத்தில் வந்த அனைத்து தகவல்களும் ருசிக்க வைத்தது நலம் தரும் மருத்துவம் பகுதியில் நெஞ்செரிச்சலுக்கான தீர்வு மற்றும் தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் கறியும் கனி அவர்களின் வரலாறு படங்கள் என அற்புதமான செய்திகளை படித்து மகிழ்ந்தேன்.
பல்சுவை களஞ்சியம் பகுதியில் பரவசம் ஊட்டும் தகவல்களும் தெய்வீக அருள் தரும் ஆன்மிகம் பக்கத்தில் பைரவருக்கு எப்படி மிளகாய் பொடி அபிஷேகம் எதற்கு அப்படி ஒரு காரணம் வந்தது என்று பல நல்ல அருமையான தகவல்களைப் படித்து மகிழ்ந்தேன்.
அரசியல் கூட்டங்கள் மற்றும் மென்மேலும் நல்ல நல்ல தகவல்களை பதினாறாம் பக்கத்தில் படத்துடனும் நல்ல செய்திகளுடன் படிக்க முடிந்தது. சுற்றுலா பக்கத்தில் வந்த விடுமுறைக்கு சுற்றுலா போகும்போது உஷாராக இருக்க வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு தகவல் மிகவும் அருமை. பாராட்டுக்கள். வேலை வாய்ப்புக்கான நல்ல பயனுள்ள தகவலாக இருப்பதால் பலருக்கும் உபயோகப்படும் என்று எண்ணத் தோன்றியது.
தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் செய்திகள் என்ற தலைப்பில் வரும் அனைத்து தகவல்களும் அறிவியல் பற்றி மிக அருமையாக தெரிந்து கொள்ள முடிந்தது பாராட்டுக்கள்.
அயல்நாடுகளிலும் புயல் அடித்து எப்படி அந்த ஊர் அவதிப்படுகிறது என்று கடைசி பக்கமாக இருந்தாலும் கருத்துள்ள தகவல்களை கொடுத்து உற்சாகமாக ஒவ்வொரு நாளும் எங்களுக்கு புதிய விடியலுக்கு ஆச்சாரம் இடும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?