வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 23.07.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 23.07.25


அன்புடையீர் 


வணக்கம் 23.7.25 அன்றைய தமிழ்நாடு பேப்பர் டாட் காம் முதல் பக்கத்தில் வந்த அனைத்து மாநில அரசர்களுக்கும் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கேள்விகளை படித்ததும் அரசியல் மிக அருமையாக புரிந்தது இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையான நாளாக அமைய எனக்கு உதவியது மனமார்ந்த பாராட்டுக்கள்.


திருக்குறளை பொருளுடன் படித்து மனம் மகிழ்ந்தேன். எறும்பூர் அருள்மிகு ஸ்ரீ மஹா சக்தி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா மிகவும் அருமை வந்தவாசி பகுதியில் பிரதோஷ வழிபாடு அந்த சிவபெருமானை பார்க்கும் ஒரு காட்சி மிகவும் அருமையாக இருந்தது பாராட்டுக்கள்.


மெட்ரோ ரயில்களில் பயணிக்க வசதியாக ஆகஸ்ட் 1 முதல் சிங்காரச் சென்னை அட்டைக்கு உரிமையாக மாற திட்டம் என்ற செய்தி நல்ல தகவல். 24 ஆம் ஆண்டு நினைவு தினம் என்று நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தியது பார்க்க அருமையாக இருந்தது. பாராட்டுக்கள் 


திமுக ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமில் மக்களிடம் ஓடிபி பெற இடைக்கால தடை அந்த செய்தி அரசியலை மிக அழகாக சொன்னது பாராட்டுக்கள்.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் கேளப்ப நாயனார் வரலாறு மிகவும் அருமை படிக்கும் போது தெரியாத தகவலாக இருந்தது.


பல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த அனைத்துமே மிகவும் அருமை மீம்ஸ் பலமுறை பார்த்து ரசித்து சிரிக்க வைத்தது.


தமிழ்நாடு இ பேப்பர் காம் நாளிதழில் அருமையான பக்கம் என்றால் அது பதினாறாம் பக்கம் தான். அதில் வரும் ஆன்மீக தகவல்களும் அரசியல் செய்திகளும் மிகவும் அருமை பலமுறை படத்துடன் பார்த்து ரசித்து படிக்க வைப்பது உண்மை.


வேலைவாய்ப்பு கார்னர் மிகவும் அருமை எந்த இடத்தில் எங்கு வேலை தயாராக உள்ளது என்று சொல்வதால் பலருக்கும் பயனுள்ள தகவலாக இருக்கும். தமிழகத்திற்கு கல்வி நிதி தர மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது உயர்கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு சொல்வதைப் பார்த்தவுடன் வியப்பாக இருந்தது.



போலி கால் சென்டர் மோசடி சைபர் குற்றப் பிரிவு எச்சரிக்கை என்று சொன்னது பயனுள்ள தகவல்.


பாகிஸ்தானில் மழை தொடர்பான சம்பவங்களில் ஒரே நாளில் ஆறு பேர் பலி என்று செய்தி அதிர்ச்சியாக படிக்க வைத்தது.. ஜப்பானில் நாடாளுமன்ற மேல் சூட்டை தேர்தல் ஆளும் கட்சி தோல்வி என்ற செய்தி அயல்நாட்டு அரசியலில் மிக அழகாக படம் பிடித்து காட்டியது.


அனைத்து பக்கங்களிலும் அள்ள அள்ள குறையாத புதுமையான தகவல்களாக சொல்லி புதிய விடியலை உற்சாகமாக தொடங்க வைக்கும் தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்


 நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%