
மின்சார கார் தயாரிப்பு
தொழிற்சாலை சென்னையில்
தொடங்கப்பட்டது. அந்த மனசு தான்
கடவுள் என்ற கட்டுரை மிகச் சிறப்பாக
இருந்தது. சென்னையில் மீண்டும்
இரண்டு அடுக்குப் பேருந்துகள்
தொடங்கப்பட்டது. பிரேமலதா
முதல் கட்ட சுற்றுப்பயணம்
தொடங்கினார். உடல் உறுப்பு
மாற்று சிகிச்சையில் தமிழகம்
முதலிடம் பெறுகிறது. மத்திய அரசு
பாராட்டு. சென்னையில் உள்ள
70 பூங்காக்களில் நூலகம்
அமைக்கப்படுகிறது. திண்டிவனம்
அருகே 1300 ஆண்டுகால
பல்லவர் கால அய்யனார் சிலை
கண்டுபிடிக்கப்பட்டது.
பழமொழிகளும் அதன் உண்மையும்
என்ற கட்டுரை நல்ல விளக்கமாக
இருந்தது. நான் திமுகவுடன்
கூட்டணி வைக்க மாட்டேன் என
ஓபிஎஸ் கூறியுள்ளார்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
தற்காலத்தில் இளைஞர்களின்
இடையே இடையே மாரடைப்பு அதிகம்
ஏற்படுகிறது. திமுகவை நோக்கி
ஓபிஎஸ் செல்வது துரோகம்
என்ன தமிழிசை கருத்து.
மும்பை டு அகமதாபாத் புல்லட் ரயில்
அறிமுகம். 500 கிலோ மீட்டர் தூரத்தை
இரண்டு மணி நேரத்தில் கடந்து
செல்கிறது. உக்ரைன் போருக்கு
இந்தியா நிதி உதவி செய்கிறது
என டிரம்ப் குற்றச்சாட்டு.
சவுதி அரேபியாவில் ஒரே நேரத்தில்
எட்டு பேருக்கு மரண தண்டனை
நிறைவேற்றம். ஒரே ஆண்டில்
230 பேருக்கு இதுவரை மரண
தண்டனை வழங்கப்பட்டுள்ளது
இன்றைய கவிதைகளும்
கட்டுரைகளும் மிகச் சிறப்பாக
இருந்தது. இன்றைய தெய்வம்
இதழில் வெளிவந்துள்ள
அனைத்து கட்டுரைகளும்
மிகவும் சிறப்பாகவும்
வண்ணப்படங்களுடன்
கவர்ச்சிகரமாகவும் இருந்தது
பாராட்டத்தக்கது
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?