
வாக்குத் திருட்டுக்கு திமுக கண்டனம்
தெரிவித்துள்ளது. ஐநா
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க
மோடி முடிவு செய்துள்ளார்.
நெல்லை பல்கலைக்கழகத்தில்
கவர்னர் இடமிருந்து பட்டம் பெறாமல்
ஒரு மாணவி துணைவேந்தரிடம்
இருந்து பட்டம் வாங்கி தன் எதிர்ப்பை
தெரிவித்துள்ளார். உலர் பழங்களை
அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடம்பு
இரும்பாகிவிடும். சென்னையில்
மின்சாரம் பஸ் தொடங்கி
வைக்கப்பட்டது. சென்னையில்
ரெண்டு புதிய வழித்தடங்களில்
மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது
சின்னஞ்சிறு கோபு அவர்களின்
தாலாட்டின் மகிமை கவிதை
மிகவும் சிறப்பாக இருந்தது.
கர்ப்பிணி பெண்கள் வேர்க்கடலை
சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை
தீமைகள் பற்றிய கட்டுரை அருமை.
மினிமம் பேலன்ஸ் வங்கிகள் தான்
தீர்மானிக்கின்றன. ரிசர்வ் வங்கி
கைவிரிப்பு. மதுரை மாநாட்டுக்கு
வருமாறு விஜய் அழைப்பு.
மாணவர்கள் பொறுப்புடன்
செயல்பட வேண்டும் என டிஜிபி
அறிவுரை. திருமலைக்கு செல்ல
இனிமேல் பாஸ்ட் டேக் அவசியம்
வாக்கு திருட்டுக்கு ராகுல்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு உள்ள கூடுதல் வரியை
ட்ரம்பு நிறுத்தி வைத்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் உறவு
நன்றாக உள்ளது என டிரம்ப்
தெரிவித்துள்ளார்.
அன்றாட செய்திகளை உடனுக்குடன்
தெரிவித்து வாசகர்களை
திருப்திப்படுத்தும் வகையில்
தமிழ்நாடு இ பேப்பர் செயல்பட்டு
வருகிறார்கள். நாம் செய்ய வேண்டிய
கடமை என்னவென்றால்
தமிழ்நாடு இ பேப்பர் க்கு குறைந்தது
ஐந்து நபர்களும். தெய்வம் இதழுக்கு
குறைந்தது ஐந்து நபர்களும்
சேர்த்து விடுவது தான் நாம்
அவர்களுக்கு செய்யும் கைமாறாக
இருக்கும் என நினைக்கிறேன்
மீண்டும் நாளை சந்திப்போம்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?