
சி.பி ராதாகிருஷ்ணன் குடியரசு
துணைத் தலைவராக பதவியேற்றார்
நேபாள இடைக்கால பிரதமராக
பெண் நீதிபதி பதவியேற்றார்.
நேபாளத்தில் இயல்பு வாழ்க்கை
திரும்பி உள்ளது. போராட்டக்காரர்கள்
தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் சிக்கி உள்ள
116 தமிழர்களை மீட்க அரசு
நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிறுநீரகப் பிரச்சனை பற்றிய
கட்டுரை நல்ல விழிப்புணர்வு.
இமாச்சலப் பிரதேசத்தில்
கனமழையால் போக்குவரத்து பாதிப்பு
தமிழக அரசு இதுவரை இல்லாத
வகையில் நிபந்தனைகள்
விதிக்கப்படுகிறது விஜய் வேதனை
முத்து ஆனந்த் அவர்கள் கவிதை
அபாரமாக உள்ளது.
குடம்புளி கொழுப்பை கரைக்கும்
என்ற செய்தி வியப்பாக இருந்தது
இயற்கையான மண் குளியல்
உடலுக்கு நன்மை பயக்கும்
ஆன்மீக செய்திகள் அனைத்தும்
அபாரமாக உள்ளது. இந்திய
பொருளாதாரம் 7% உயரும்.
நல்லது நடந்தால் சரி.
கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு
இளையராஜா 4 கோடி மதிப்புள்ள
தங்க நகைகள் வழங்கினார்.
தெலுங்கானாவில் தொடர் மழை.
டெல்லியில் மட்டும் பட்டாசு வெடிக்க
தடை செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஜாதிவாரி
கணக்கெடுப்பு செப்டம்பர்
22-ல் தொடக்கம்.
நேற்றைய தினம் நானும் நெல்லை
குரலோன் அவர்களும் போனில்
பேசினோம். தெய்வம் இதழை
சிறப்பிக்க வேண்டியது நமது
பொறுப்பு என்ற வகையில் பேச்சு
அமைந்தது. எனவே நம் வாசக
சொந்தங்கள் அனைவரும்
கண்டிப்பாக தெய்வம் இதழை
சந்தாவாக ஏற்றுக் கண்டு
செயல்பட வேண்டும். மேலும்
தமிழ்நாடு இ பேப்பர் மற்றும்
ஆனந்த பாஸ்கர் இதழ்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும்
மேலாக இலவசமாக வழங்கி
வருகிறார்கள். அவர்களது
தன்னலமற்ற சேவையை
நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
ஒருபுறம் நமக்கு மனசு
கொஞ்சம் உறுத்தலாக உள்ளது.
ஏதேனும் குறைந்த அளவு சந்தா
வைத்து அதனை ஏற்றுக் கொண்டால்
மனதுக்கு ஆறுதலாக இருக்கும்
என நினைக்கிறேன். இலவசம்
என்றால் பலர் இளக்காரமாக
நினைக்கிறார்கள். இது எனது கருத்து
நானும் நெல்லை குரலோன் சார்
அவர்களும் இதைப்பற்றி
பகிர்ந்து கொண்டோம்.
மற்றவர்களின் கருத்துக்களையும்
அறிய விரும்புகிறோம்
மீண்டும் நாளை சந்திப்போம்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?