டெல்லி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட நபர்களை மோடி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பயங்கரவாத சம்பவம் என மத்திய அரசு அறிவிப்பு. உள்ளூர் செய்திகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
குல்கந்தின் மருத்துவ பயன்கள் தெரியாத பல விஷயங்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
நிலவில் நீர் இருப்பதை புகைப்படம் எடுத்து சந்திராயன் பூமிக்கு அனுப்பியது. கரூர் சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை.
பெசன்ட் நகர் அஷ்டலஷ்மி கோயில்
பற்றிய கட்டுரை அருமையாக இருந்தது. புதுக்கவிதைகள் அனைத்தும் கனஜோர். சுற்றுலா பகுதியில் பிச்சாவரம் பற்றிய கட்டுரை கண்களுக்கு விருந்து அளித்தது.
சாத்தான்குளம் கொலை வழக்கு சம்பந்தமாக சிபிஐ பதில் அளிக்க கோர்ட் உத்தரவு. டெல்லி மாசுக்கட்டுப்பாட்டால் பொதுமக்களுக்கு நெஞ்சு பாதிப்புகள் ஏற்படுவதாக புகார். திருப்பதி தேவஸ்தானத்தில் அசைவ உணவு சாப்பிட்ட இரண்டு ஊழியர்கள் நீக்கம்
குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி 15 கோடி நன்கொடை வழங்கினார். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட இறந்த உடலில் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி உறுப்புகள் புதுப்பிக்கப்பட்டது. ராகுல் தேஜஸ்வின் இருவரும் தூக்கம் இலலாமல் தவிக்கிறார்கள் என பாஜக குற்றச்சாட்டு. பண்டிகை கால வாகன விற்பனைகள் சூடு பிடிக்க துவங்கி உள்ளது . அமெரிக்க அரசு முடங்குவதை தடுக்க மசோதா நிறைவேற்றம். ட்ரம்பு நிம்மதி அடைந்தார். பாகிஸ்தானில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு 26 பேர் பலி. பிபிசி இயக்குனரும் உயர் அதிகாரிகளும் ராஜினாமா செய்து உள்ளனர். ஈக்குவட்டார் சிறையில் கைதிகள் மோதலில் 31 பேர் உயிரிழப்பு.
இன்றைய செய்திகள் அனைத்தும் சிறந்த முறையில் வெளிவந்துள்ளது பாராட்டத்தக்கது.
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன்
மீண்டும் நாளை சந்திப்போம்.

நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?