அவன் தொழில் விசித்திரமானது.
அழ முடியாதவர்களுக்காக அவர்கள் சார்பில் அழுவது.
அவன் என்பவன் அமுதன்.
நவீன உலகில், நாகரீக சமுதாயத்தில் “உணர்ச்சிகள் தேவையில்லை” என்று எந்திர வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டவர்கள்தான் அதிகம்.
இறப்புச் செய்தி வந்தாலும் கண்கள் உலர்ந்தே இருந்தன. அப்போதுதான் அவர்கள் அழைப்பது அமுதனை.
“மூத்தோர் மரணமா?... ஒரு மணி நேரம்... இவ்வளவு ஆகும்”
"இள வயதினர் மரணமா?.... அரை மணி நேரம்... இவ்வளவு ஆகும்”
ஒவ்வொரு அழுகைக்கும் குறிப்பிட்ட கட்டணம் இருந்தது.
அவன் கண்ணீரையும் காசாக்கப் பழகினான். கண்கள் காலக் கணக்கில் ஈரமாவதற்குப் பழகின.
இறுதிச்சடங்குகளில் அவன் அழும்போது, சுற்றியிருந்தவர்கள் நிம்மதியாக மூச்சு விடுவார்கள்.
“யாரோ ஒருவன் நமக்காக அழுகிறான்” என்கிற நம்பிக்கையில்.
அவன் அழுகையில் உண்மை இல்லை. நேர்மை மட்டும் இருந்தது.
ஒரு நாள், மருத்துவமனையிலிருந்து அழைப்பு.
“மிஸ்டர்.அமுதன்... உங்கள் அம்மா…”
அந்த வார்த்தை முழுமையடையவில்லை.
ஓடினான்.
அம்மாவின் உடல் எரியத் தொடங்கியது.
ஆனால், அவன் கண்களில் இன்னும் ஈரமில்லை.
முயன்றான். மனதைப் பிழிந்தான். பழைய நினைவுகளை ரீவைண்ட் செய்தும் பார்த்தான். ஒரு துளி கூட வரவில்லை.
அப்போதுதான் இன்னொருவன் வந்தான். வயது முப்பத்தைத் தாண்டியவன். கண்களில் புரொபஷனல் ஈரம்.
“யார் மரணம்?” கேட்டான்.
“அம்மா,” என்றான் அமுதன்.
அந்த மனிதன் தலையசைத்தான்.
அடுத்த சில நொடிகளில் வெடித்து அழுதான். உண்மையைப் போலவே நடித்த துயரம்.
சுற்றியிருந்தவர்கள் நிம்மதியாக நிமிர்ந்தார்கள்.
அமுதன் அந்த மனிதனைப் பார்த்தான்.
அவனைப் போலவே
அழுவதை
காசுக்காகக் கற்றுக்கொண்ட
இன்னொரு மனிதன்.
(முற்றும்)

முகில் தினகரன்,
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?