அன்னமே உயிர் தந்த
அமுதமென்றார் முன்னோர்!
பன்னீரும் பட்சணமுமின்றிப்
பசி பொறுத்தார் சான்றோர்!
பருக்கையொன்று வீணானால்
பாவம் உலகம் பின்னாளில் அழும்!
குப்பையாய்க் கழிக்கப்படும் சோறு
கண்ணீராய் மாறும் பாரு!
விதைத்தவன் வியர்வையை நினை!
வயலில் கண்ட துயரத்தை நினை!
அறுத்தவனின் அறத்தை நினை!
அன்னம் வந்த வழிதனை நினை!
உண்டபின் எஞ்சியதை
இல்லார்க்குக் கொடு!
பசியின் முகம் பார்த்து
பரோபகாரம் புரிந்திடு,!
அன்னமே தெய்வமென்பது
ஆன்றோர் சொன்ன மொழி!
அவமதிப்பவன் ஆயுளில்
அனுபவிப்பான் ஓர்நாளில்!
உண்ணும் முன் வணங்கிடு!
உண்டபின் காத்திடு!
உலகத்தார் பசி நீங்க
ஒவ்வொரு பருக்கையையும் சேர்த்திடு!
----
முகில் பதிப்பகம்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?