கையூட்டு

கையூட்டு



விடுமுறை நாள்களும் வேலை நாள்களாய் குளிர்சாதன அறையில் - உள்ளம் குளிர குளிர அலுவலகத்துக்கு அலுவலகம் கோப்புகளுக்கு கோப்புகளாய் காப்புகளாய் கைமாறுகிறது கையூட்டு.


மேசைக்கு மேசை பேப்பர் வெயிட்டால் அடுத்தது காட்டும் பளிங்குபோல் ஒட்டப்படாத உறைகளில் ஓசைபடாமல் சிரிக்கிறார் காந்தி சாந்தி அடைகிறார் அதிகாரி.


பூக்களாய் காய்களாய் கனிகளாய் காலத்துக்குக் காலம் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என இறந்து போன மொழிகளில் தள்ளுவதும், இழுப்பதுமாய் அலுவலகப் பணிகள் தொடர முகப்பு வாயிலில் குலுங்கும் பூக்கள் மட்டும் நம் காதில் விழுந்து கொண்டே இருக்கின்றன.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%