வார இறுதி விடுமுறை: 725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி விடுமுறை: 725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்



சென்னை, பிப்.

- சென்னை மற்றும் பிற நகரங்களிலிருந்து வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக நாளை முதல் 725 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்க த்திலிருந்து பல்வேறு நகரங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மொத்தம் 495 பேருந்து களும், கோயம்பேட்டி லிருந்து 110 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து மற்ற ஊர்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஞாயிற்றுக் கிழமை மீண்டும் ஊர் திரும்பவும் பயணிகளின் தேவைக் கேற்ப பேருந்து கள் இயக்கப்படும் நிலை யில், இதுவரை 21,000-க்கும் மேற்பட்டோர் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகள் www.tnstc.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பய ணிக்க போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%