சின்னஞ்சிறு உலகத்தின்
வண்ணமிகு ஆசைகள்
வானிலே பறக்கும் காற்றாடி பிம்பங்கள்
காற்றிலே சுழலும் விசிறி பொம்மைகள்
கம்பியிலே கட்டி வைத்த பலூன் பறவைகள்..
"அத்தனைக்கும் ஆசைப் படு " எனும் அறிஞர் வாக்கு..
மெத்தப் படிக்காமலே புரிந்த நெஞ்சில்
நித்த நித்தம் குரல் கொடுக்கும் பசியின் வேகம்...
வாய் வரைக்கும் எட்டி வந்தே ராகமாய் கேட்கும் " அம்மா ஒரு பலூன் வாங்குங்க " என்றே...
வாங்காத புறக்கணிப்பு
சோகம் காட்டும்....
காற்று போன பலூனாய் சில நேரம்.
எல்லாமும் விற்ற பின்னே
தோன்றும் மகிழ்ச்சி..
முகத்திலும் மின்னலடிக்கும்
அழகுதான் இதுவோ
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%