news Breaking News
clock

விஜயின் குரல் நாடு முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும்": கே.ஏ.செங்கோட்டையன்

விஜயின் குரல் நாடு முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும்": கே.ஏ.செங்கோட்டையன்



ஈரோடு, பிப். –


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகபாளையம் பிரிவில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) மேற்கு ஒன்றியத்தின் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “தைப்பூசம் என்ற இனிய நாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் புதிய மாற்றத்தை உருவாக்க காத்திருக்கின்றனர்,” என்றார்.


மேலும் அவர் கூறுகையில், “தமிழக மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சிக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வருமானத்தை விட்டு, தமிழக மக்களுக்குத் தூய ஆட்சியை வழங்கும் நோக்குடன் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். தமிழகத்தின் அனைத்து குடும்பங்களிலும் மகன், மகள் என அனைவரும் விஜய் முதல்வராக வர வேண்டும் என விரும்புகின்றனர்,” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News