news Breaking News
clock

முளைப்பாரி எடுத்து ஈஷாவில் பக்தர்கள் வழிபாடு

முளைப்பாரி எடுத்து ஈஷாவில் பக்தர்கள் வழிபாடு



கோவை, பிப். –


ஈஷாவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ளைப்பாரியால் வடிவமைக்கப்பட்ட லிங்க பைரவி தேவியின் திருவுருவத்துடன், பூக்கரகம், பூவோடு ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பாதயாத்திரை மேற்கொண்டனர்.


ஈஷாவில் ‘லிங்க பைரவி’ திருமேனி கடந்த 2010-ஆம் ஆண்டு தைப்பூச நாளன்று சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தப் புனித நாளைக் கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் லிங்க பைரவியின் பிரதிஷ்டை தின விழா மற்றும் தைப்பூசத் திருவிழா ஈஷாவில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


அந்த வகையில், இந்த ஆண்டு விழாவையொட்டி ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் வெளிநாட்டினர் எனப் பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து, முளைப்பாரியால் அலங்கரிக்கப்பட்ட தேவியின் திருவுருவத்தைப் பல்லக்கில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.


இதனுடன் ஆயிரக்கணக்கான பெண்கள் தனித்தனியாக முளைப்பாரி, பூக்கரகம் மற்றும் பூவோடு ஏந்தி தேவியின் நாமங்களை முழங்கியபடி பாதயாத்திரையாக வந்தனர்.


இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்கள் மேற்கொண்ட ‘பைரவி சாதனா’ எனும் 21 நாட்கள் ஆன்மீக செயல்முறையின் நிறைவு நிகழ்ச்சி லிங்க பைரவி வளாகத்தில் நடைபெற்றது.


மாலையில் லிங்க பைரவி தேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் தமிழகம் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேவியின் அருளைப் பெற்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News