விடுபட்ட குளங்களை அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் இணைக்க தவிச வலியுறுத்தல்

விடுபட்ட குளங்களை அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் இணைக்க தவிச வலியுறுத்தல்

 அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடு பட்ட குளங்களை இணைத்து தண்ணீர் நிரப்ப வேண்டுமென விவசாயிகள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு மாவட்டக்குழு கூட்டம், அண்மையில் நடைபெற்றது. இதில், மாநிலச் செயலாளர் பி.பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், அவிநாசி - அத்திக்கடவு திட் டம் 2024 இல் பயன்பாட்டிற்கு வந்தது. இத்திட் டத்தில் 6 நீரேற்று நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் நிறைய குளம், குட்டை கள் தண்ணீர் நிரப்பப்படாமல் விடுபட்டிருக்கி றது. நம்பியூர் மற்றம் கோபி வட்டத்தில் சில பகுதிகளில் தண்ணீர் சரியாக வருவதில்லை என புகார் எழுந்தது. மேலும் சில குட்டைக ளில் தண்ணீர் விடுவதிலலை என்ற குறை பாடு இருந்தது. எனவே முறையாக தண்ணீர் வருவதற்கும், விடுபட்ட குட்டை, குளங்களில் தண்ணீர் விடுவதற்கும் மேலும் நிதி ஒதுக்கீடு செய்து முறையாக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் வனத்தை ஒட்டி யுள்ள பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் வாழை, கரும்பு, மக்காச்சோளம், தென்னை போன்ற பயிர் களை சேதப்படுத்தி வருகின்றனர். இதற்கான இழப்பீட்டு தொகையை முறையாக கணக் கீடு செய்து காலதாமதமின்றி வழங்க வேண் டும். மில்கி மிஸ்ட் கழிவால் பாதிப்பு பெருந்துறை தாலுகா, பட்டக்காரன்பா ளையத்தில் இயங்கி வரும் மில்கி மிஸ்ட் பால் பொருட்கள் தொழிற்சாலை செயல் பட்டு வருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள பெரும்பள்ளத்தில் விடுவதால், பட்டக்காரன் பாளையம், சுள்ளிபாளையம், சீனாபுரம், துடுப் பதி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குட்டைகளில் தண்ணீர் தேங்கி அப்பகுதியில் உள்ள கிணறு கள் மாசுபட்டு வருகின்றன. உடனடியாக இந்த ஆலையை மூட வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%