மாநில அளவிலான கலைத் திருவிழா அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்!

மாநில அளவிலான கலைத் திருவிழா அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்!

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் பரிசு பெற்று அசத்தினர். நீலகிரி மாவட்டத்தில் 2025 – -26 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வட்டாரம், மற்றும் மாவட்ட அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. வட்டார அளவில் நாட்டுப்புற நட னம், பரதநாட்டியம், களிமண், காய்கறி சிற்பங்கள் வண்ணம் தீட்டுதல், நகைச்சுவை அரங்கம், வில்லுப்பாட்டு தனிநபர் நடிப்பு, மெல்லிசை, இசைக்கருவி மீட்டுதல் போன்ற போட்டி கள் வகுப்பு வாரியாக நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். கடந்த மாத இறுதியில் மாநில அளவி லான போட்டிகள் கரூர், ஓசூர், சேலம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளி யாகின. இதில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள், 10 பேர், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 3 பேர் என, 13 பேர் பரிசு பெற்று அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி அதிகாரிகள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.


கிராவல் மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை சேலம், டிச.9- செட்டி சாவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராவல் மண் கடத்தப்படுவதாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். சேலம் மாநகரம் அருகிலுள்ள செட்டிசாவடி, கோம்பைப் பட்டி டால்மியா மேக்னசைட் உள்ளிட்ட பகுதிகளில் பர்மிட் இல்லாமல் தொடர்ந்து மண் கடத்தல் நடத்தப்படுவதாக இப்ப குதியினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பி னும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படு கிறது. இதனையடுத்து மேற்கு சட்டமன்ற உறுப்பினருடன், பொதுமக்கள் மண் கடத்தும் இடத்திற்கு சென்று கிராவல் மண் கடத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றார். பொதுமக்கள் வருவதை கண்ட அவர்கள் ஜேசிபி வாகனம் டிப்பர் லாரிகளை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். மேலும் இது சம்பந்த மாக மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%