news Breaking News
clock

விரல் முறிந்த கவிஞன்

விரல் முறிந்த கவிஞன்



முறிந்தது விரல்

கடவுளே

நீ முறித்தது

என் நம்பிக்கையை!


என் விரல்

என் சொல்லின் 

இறக்கை என்பது

தெரியாதா உனக்கு?


என் எலும்பு உடைந்த ஓசை

உன் வானத்தில்

ஒலிக்கவில்லையா?

இல்லை நீ செவிடா?


விரல் முறிந்த கையால்

நான் எழுதுவேன்

பக்தியை அல்ல

உன்னை எதிர்க்கும்

போராட்டத்தை!


எழுதும் ஒவ்வொரு 

முயற்சியும்வலியாய் 

முளைக்கும் போது

நீயெதற்கு கடவுளே?


என் இரத்தம் மையாகி

கவிதை பிறக்கும் போதே

நீ கண் மூடி இருப்பது ஏன்?


என் சப்தம் பிரார்த்தனை அல்ல,

இது சாபம்!

விரல் முறிந்த கவிஞன்

எரியும் சொல்! 


இன்னும் எழுதுவேன்…

வலி என் பேனா

கோபம் என் மை

அது

உன்னைச் சாடும்

என் கடைசி பிரார்த்தனை!

------

முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News