news Breaking News
clock

விழிப்புணர்வு

விழிப்புணர்வு


-------------------------------

மாந்தர்களே

நாம் உறங்கிவிட்டால்

பிரச்சனைகள்

விழித்துக்கொள்ளும்!

நாம் விழித்துக் 

கொண்டால்தான்

பிரச்சனைகள் தூங்கும்!


இங்கே

உறக்கத்திலும்கூட

விழித்திருக்க வேண்டிய காலச்சூழலில் தான்

வாழ்கிறோம் என்பதை

எப்படி மறுக்க முடியும்?


சுடுகாட்டில் எரிகின்ற

பிணங்கள் கூட

எழுகின்றன

வெட்டியான்

அடித்தால் தான்

வீழ்கின்றன!


இமைப்பொழுதும்

சோராமல் மீன்கள்

விழித்திருந்தாலும் கூடச்சமயத்தில்

தூண்டிலில் அகப்படுகின்றன!


பார்ப்பதற்குப்

புதை குழிகள் கூடச்

சமமாகத்தான் 

காட்சியளிக்கின்றன

கால் வைத்தால்தானே

இன்னல் புரிகிறது!


பார்வையற்றவர்களின்

புற உலகு இருண்டிருந்தாலும்

அக உணர்வு

சுடர் விடுகின்றது!


மாலுமி எவ்வளவு தான்

விழித்திருந்தாலும்

திமிங்கலம் கப்பலைக்

கவிழ்த்து விடுகிறது

யானையைக் குழிவெட்டி

பிடிப்பதைப்போல்

நம்மைச்சுற்றிலும்

மாயக்குழிகள்

தோண்டப்பட்டிருக்கலாம்!

இரவு நேரத்தில்

காட்டுப்புதரில்

கைவிளக்கு

கொண்டு செல்வது மட்டும் விழிப்புணர்வு அல்ல!

எடுத்து வைக்கும்

ஒவ்வொரு அடியும்

சீரிய சிந்தையோடும்

உணர்வோடும்

வைக்க வேண்டும்!


கவிஞர் த.அனந்தராமன்

துறையூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News