news Breaking News
clock

விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு



நாமக்கல், பிப். –


திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் “குவாண்டம் எலக்ட்ரானிக்ஸ், நுண்ணறிவு அமைப்புகள், ஸ்மார்ட் ஹெல்த் கேர் மற்றும் வளம்குன்றா பொறியியல் தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் இருநாள் சர்வதேச கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறை, கல்லூரி வளாகத்தில் உள்ள விவேகானந்தா கலையரங்கில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தலைவர் செயலர் மு.கருணாநிதி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கத்தைத் தொடக்கி வைத்தார். நிர்வாக இயக்குநர் எஸ்.குப்புசுவாமி, தலைமை நிர்வாகி எம்.சொக்கலிங்கம், ஆராய்ச்சி இயக்குநர் ஆர்.பாலகுருநாதன், கல்லூரி முதல்வர் கே.சி.கே.விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


ஒருங்கிணைப்பாளர்களாக சி.ஜி.தீபன்ராஜ், பி.டி.கலைவாணி, எஸ்.சோழவேந்தன் செயல்பட்டனர். துறைத்தலைவர்கள் பி.பிரபாகரன், ஆர்.அருள்முருகன், எஸ்.ராதா, எஸ்.குமார், எம்.எம்.சரவணன், கே.ராதா, எஸ்.மகேஸ்வரி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் அஸ்மராஷித் பின் பொன்னீரன், டாக்டர் வான் சுஹைமிசான் பின் வான் ஜாகி, டாக்டர் அசோக் வஜ்ரவேலு உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். அமைப்பு ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாடு, டிசி–டிசி மாற்றிகளில் உயர் மின்சக்தி அடர்த்தி மறுவடிவமைப்பு, தொழில் 4.0 மற்றும் 5.0 காலகட்டங்களில் பொறியியல் புதுமைகள் உள்ளிட்ட தலைப்புகளில் அவர்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.


கருத்தரங்கில் இந்தியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 300 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விளக்கப்பட்டன. கருத்தரங்கத்துடன் இணைந்து நடைபெற்ற நான்கு பயிற்சி பட்டறைகளின் மூலம் சுமார் 1,500 பேர் பயனடைந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் தேர்வு கட்டுப்பாட்டாளர் பி.கண்ணன் நன்றி கூறினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News