நாமக்கல், பிப். –
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இம்மாதம் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறுகிறது.
மூன்றாவது வெள்ளிக்கிழமை நடத்தப்படும் இந்த முகாம், காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறும் என கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடத்த உள்ளன.
10ஆம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதோர், 12ஆம் வகுப்பு, பட்டயப்படிப்பு (டிப்ளமோ), பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. பயிற்சி மற்றும் கணினி தொடர்பான பயிற்சி (ஜாவா, டாலி) முடித்த ஆண், பெண் உள்ளிட்ட அனைத்து கல்வித்தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம்.
மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவு மற்றும் ஆலோசனையும் வழங்கப்படும். இம்முகாமில் பங்கேற்க வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். இம்முகாம் மூலம் பணியில் அமர்த்தப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
----------
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?