கட்டுமரம் ஏறு.. கடல் அலை பாரு.. சற்றும் நிற்காதே இதை அறிந்து கொள்ளடா!
கரையினில் நின்று விட்டால்.. வெற்றி ஏதடா?
கொட்டும் மழை பெய்ய
குடை பிடித்திருந்தால். பட்டுத் தெறித்தோடும் நீராய் பயமும் ஏனடா.. முட்ட நனைந்தால் தானே வெற்றி தானடா!
.சிட்டுக் குருவி பாராய்
சிறகசைத்துப் பறந்தே.
எட்டுகிற உயரம் உனக்கில்லையோ.. கூடு யில்லா மரங்கள்
குருவிகளை விடவும் மானுடனே வெற்றி பெரிதல்லவோ.!
பட்டுப் பூச்சிப் பாராய்.. கூடுகளில் அடங்கும்.. ஒருநாளில் கிழித்து வெளியேறும் திறன் பாரடா.. கட்டுகளை விட்டு கிளம்பிவிடும் காலம் வெற்றி தானடா!
தொட்டு விடு போதும்.. தொடர்ந்து விடு நாளும் கட்டு கரை இல்லாத அலைகள் தானடா.. உன் கட்டுடலில் தோன்றும் உழைப்பாலே இங்கு வெற்றி தானடா.!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?