வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் பிப்.23 முதல் தி.மு.க. வீடு, வீடாக பிரச்சாரம்: ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, பிப்.
‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்' என்ற தலைப்பில் 23-ந் தேதி முதல் தி.மு.க. வீடு, வீடாக பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சரு மான மு.க.ஸ்டாவின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதா வது:– திராவிட மாடல் அரசு மைந்த பிறகு பெண்களுக்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’, - ‘விடியல் பயணம்’, - ‘தோழி விடுதிகள்’, - ‘புதுமை பெண் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு, மகளிருக்கான ஆட்சியென நடைபெற்று வருகிறது. நமது சாதனைத் திட்டங்களால் பெண்கள் -‘வெல்லும் தமிழ்ப் பெண்களாக’ உயர்ந்துள்ளனர்.
பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்களையும் – சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகளிரிடம் எடுத்து சென்று சேர்ப்பதே ‘வெல்லும் தமிப்பெண்கள்’ பரப்புரை யின் நோக்கமாகும். இப்பரப்புரையை, வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் விதமாக தி.மு.க.வின் சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாவட்டச் செயலாளர்களால் வழங்கப்பட்டுள்ள பட்டியலின் அடிப்படையில், 10 மகளிரை கொண்ட குழு உருவாக்கப் பட்டுள்ளது.
அக்குழுவின் சார்பில் ஒரு உறுப்பினர் வீதம் தேர்வு செய்யப்பட்டு தொகுதி அளவிலான பயிற்சிக் கூட்டங்களை நடத்திட வேண்டும். “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” பரப்புரைக்கான சட்டமன்றத் தொகுதி வாரியான பயிற்சிக் கூட்டத்தை வரும் 20, 21 மற்றும் 22–ம் தேதிகளுக்குள் அனைத்து தொகுதிகளிலும் நடத்தி முடித்திட வேண்டும்.இப்பயிற்சியை, சட்டமன்றத் தொகுதி மகளிர் அணி பொறுப்பாளர்கள் வழங்குவர்.
தேர்தலை காரணமாக வைத்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையே முடக்குவதற்கான ஒன்றிய பா.ஜ.க. – அ.தி.மு.க.வின் சூழ்ச்சிகளை முறியடித்து, “ நீ ஆயிரம் ரூபாயை நிறுத்த முயற்சித்தால், நான் என் மக்களுக்கு ரூபாய் ஐந்தாயிரமாக தருவேன்” என சூளுரைத்து ரூ.5 ஆயிரத்தினை தமிழ்நாட்டு பெண்களுக்கு வழங்கிய திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் வீடு வீடாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
அதுமட்டுமின்றி, ‘திராவிடமாடல் 2.0’ ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்பதையும் மகளிர்க்கு உணர்த்திட வேண்டும். வரும் 23–ம் தேதி முதல் “வெல்லும் தமிழ்பெண்கள் - வீடு வீடாகப் பரப்புரை” தொடங்கி, உலக மகளிர் தினமான மார்ச் -8–ம் தேதிக்குள் அனைத்து வீடுகளையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.