"சிவராத்திரியின் மகிமை"

"சிவராத்திரியின் மகிமை"


காசி காரில் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தான். வழியில் கார் சிக்னலில் மாட்டிக் கொண்டது .ஒவ்வொரு சிக்னலிலும் மாட்டிக் கொள்கிறோமே !நேரம் ஆக ஆக டிராபிக் ஜாம் ஆயிடுமே! திருவண்ணாமலைக்கு போக குறைந்தது 5 மணி நேரமாவது ஆகிவிடுமே !என்று மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தான்.காசி ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கிரிவலம் செல்வது அவனது வழக்கம். இம்முறை சிவராத்திரிக்கு அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டு சிவனின் அருளை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் புறப்பட்டான் .சிக்னல் எப்பொழுது கிடைக்கும் என்று நிமிஷத்தையே பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், வயதான தாத்தா ஒருவர் சாலையை மெதுவாக கடந்து சென்று கொண்டிருந்தார் .பாதி ரோடு செல்லும் போது கிரீன் சிக்னல் விழுந்துவிட்டது. காரின் அருகிலேயே அவர் சென்றதால் காரை உடனே நகர்த்த முடியவில்லை. பின்னால் உள்ளவர்கள் ஹாரன் சப்தம் எழுப்பினர். தாத்தா காரை கடந்த உடன் காரை வலது புறமாக கொஞ்சம் நகர்த்தி ஓட்ட முயற்சித்தார் காசி. அப்போது திடீரென பின்னால் இருந்து டூவீலரில் வந்த ஒருவன் காரின் மீது மோதி நடுரோட்டில் விழுந்தான். கீழே விழுந்தவுடன் ஹெல்மெட் கழண்டு வேறு ஒரு பக்கம் ஓடியது .மண்டையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது .எல்லோரும் ஓடிவந்து வண்டியை நிறுத்தி அந்தப் பையனை எழுப்பினார்கள். ஆனால் அவன் மயங்கி கிடந்தான். உடனே ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் .சார் ,உங்க வண்டியில் தானே மோதி அடிபட்டது. நீங்களே காரில் அவனை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுங்கள் என்று எல்லோரும் கேட்டனர் .காசி என் மீது தவறு இல்லை அவன் தான் வந்து மோதினான் என்றான். சார் நான் சிவராத்திரிக்கு சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு செல்கிறேன் என்னால் முடியாது என்றான். அவனுடைய மனைவி பாவங்க, ஒருத்தர் அடிபட்டு இருக்கும்போது அவருக்கு உதவுவது தானே நல்லது. சாமியை அப்புறம் பார்க்கலாம் என்றாள். அதற்குள் போலீசும் வந்து விட்டது. போலீஸ்காரர் வந்து சத்தம் போட்டு யார் மீது தப்பு என்று பின்னாடி பார்த்துக்கலாம். முதல்ல வண்டியின் பின்னால் அவரை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்றார். ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார்கள் .டாக்டர் மண்டையில் அடிபட்டு ரத்தம் நிறைய போயிருச்சு நாளைக்கு காலையில் தான் எதுவும் சொல்ல முடியும். உறவினர்களுக்கு தகவல் சொல்லி விடுங்கள் என்று கூறிவிட்டு அவர் உள்ளே சென்று விட்டார் .போலீஸ்காரர் காசி மற்றும் அவரது மனைவி இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். சார் அந்த பையன் கண் திறக்கும் வரைக்கும் நீங்க எங்கும் செல்ல முடியாது இரவு முழுவதும் இங்கேயேதான் இருக்கணும். உங்கள் மனைவியை மட்டும் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்றார். அவனும் வேறு வழி இல்லாமல் மனைவியை மட்டும் வீட்டிற்கு அனுப்பி விட்டான் .காசி மட்டும் விடிய விடிய முழித்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். சிவராத்திரிக்கு கோயிலுக்கு சென்று சிவனை தரிசனம் செய்யலாம் என்று நினைத்தவனுக்கு விதி இப்படி மாற்றியது. இருந்தாலும் அவன் மனது கோயிலுக்கு சென்றது . மனக்கண் முன்னே, சிவனுக்கு அபிஷேகம் செய்வது, பக்தர்கள் எல்லோரும் "அரோகரா" என்று பக்தியுடன் சொல்வது. போன்ற நிகழ்வுகள் அவன் கண்முன்னே தோன்றியது .அவன் இங்கிருந்தபடியே சாமியிடம் வேண்டிக் கொண்டான். அடிப்பட்ட பையனின் உயிரை காப்பாற்று அண்ணாமலையாரே என்று பிரார்த்தனை செய்தான். பெஞ்சில் உட்கார்ந்தபடியே தியானம் செய்து கொண்டே இருந்தான். பொழுது விடிந்ததும் போலீஸ்காரர் வந்து சார்.. என்று கூப்பிட்டார். அந்தப் பையன் கண்ண முழிச்சுட்டான். உயிருக்கு ஒன்றும் பயமில்லை சார். இப்பதான் ஹாஸ்பிடலில் இருந்து போன் வந்தது .நீங்க வீட்டுக்கு போகலாம் சார் என்றார். கண்ணைத் திறந்த காசியின் பார்வை மேஜையின் மேல் உள்ள கீ செயினில் இருந்த லிங்கம் கண்ணில் பட்டது. இரு கை கூப்பி அந்த லிங்கத்தை வணங்கினான். அண்ணாமலையாரே இந்த லிங்க வடிவில் அவனுக்கு காட்சி தந்தது போல் உணர்ந்தான்.



எம் .எல் .பிரபா.

 ஆதம்பாக்கம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%