சிவகாசி, பிப்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எரிச்சநத்தத் தில் 108 ஆம்புலன்ஸை திருடி சென்றவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் நந்தி ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் குணசேகர பாண்டியன் (39). இவர் சிவகாசி அருகே எரிச்ச நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்பு லன்ஸ் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஞாயிறன்று இரவு எரிச்சநத்தம் அங்கன் வாடி மையம் அருகே ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு சாப்பிடச் சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது, ஆம்புலன்ஸ் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து, எம்.புதுப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். வாகனத்தில் உள்ள ஜி.பி.எஸ் கருவியை ஆய்வு செய்த போது அருப்புக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. எனவே, அருப்புக் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் ஆம்புலன்சை மீட்டனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் எம்.சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் (26) என்பவர் ஆம்புலன்ஸை திருடிச் சென்றது தெரியவந்தது. எம்.புதுப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் கூறுகையில், கனகராஜ் கடந்த காலங்களில் தனியார் பள்ளி பேருந்து, லாரி ஆகிய வற்றை இதேபோல் எடுத்துச் சென்றுள்ளார். அதேபோல் மது போதையில் ஆம்புலன்சையும் ஓட்டிச் சென்றுள்ளார். திருடிச் செல்லும் வாகனங்களை விற்பதற்கு முயற்சி செய்வதில்லை. எங்காவது நிறுத்திவிட்டு வந்து விடுவார் என தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?