அனுமதியின்றி மது விற்றவர் கைது 150 பாட்டில்கள் பறிமுதல்
Feb 18 2026
43
திருவில்லிபுத்தூர், பிப்.
- மல்லி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாமிநத்தம் மேலூர் காளியம்மன் கோவில் அருகே அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக வந்த தகவலின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து மல்லி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரகுபதி சம்பவ இடத்துக்கு சென்று சோதனை மேற் கொண்டார். அப்போது தங்கபாண்டியன் என்பவருக்கு சொந்தமான தகரச் செட்டில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்கபாண்டியன் கைது செய்யப் பட்டார். அங்கிருந்து 150 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர் மீது ஏற்கனவே 11-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவர்மீது புதிய வழக்கு பதிவு செய்து விசா ரணை நடைபெற்று வருகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?