news Breaking News
clock

நெடுஞ்சாலைத்துறை வாறுகாலில் விழுந்த பசு மாடு

நெடுஞ்சாலைத்துறை வாறுகாலில் விழுந்த பசு மாடு



சாத்தூர், பிப்.

- சாத்தூரில் நெடுஞ்சாலைத்துறையின் மூடப்படாத வாறுகாலில் பசுமாடு விழுந்தது. நீண்ட நேர போராட் டத்திற்குப் பின் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். சாத்தூரில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பிர தானச் சாலை உள்ளது. இப்பகுதியில் காவல்நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், கோவில்கள் உள்ளிட்டவை உள்ளன. இதனால் ஏராள மான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், இச்சாலை இருபுறத்திலும் நெடுஞ்சா லைத்துறையால் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வடி கால்கள் அமைக்கப்பட்டன. இவை பல இடங்களில் மூடப்படவில்லை. இந்நிலையில், மூடப்பட்ட வடிகாலின் மேற்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பசு மாடு திடீரென உள்ளே விழுந்தது. அது வெளியே வர முடியாமல் தவித்தது. அக்கம் பக்கத்தினர் மீட்க முயற்சி செய்தும் பலன் கிடைக்க வில்லை. எனவே, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், கழிவுநீர் வாறுகாலில் இறங்கி 3 மணி நேரம் போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்க வாறுகால்களை முழுமையாக மூட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News