மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு பந்தல்கால் நடும் விழா

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு பந்தல்கால் நடும் விழா

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு பந்தல்கால் நடும் விழா

தே.மு.தி.க. வருமா? 1–ந் தேதி பாருங்கள் என்கிறார் நயினார்


மதுரை, பிப். –


தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தே.மு.தி.க. வருமா என்பதை 1–ந் தேதி பாருங்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.


யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.


மதுரையில் மார்ச் 1 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு மண்டேலா நகரில் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணா திமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


அப்போது அவர் கூறியதாவது:-


வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைக்கும். சென்னை மதுராந்தகத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டம் பெரிய மாநாடாக மாறி திமுக ஆட்சிக்கு பெரிய பேரிடியாக அமைந்து இருக்கிறது. தற்போது மதுரையில் மீண்டும் நீதி கேட்டு மார்ச் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்வார்கள். இதுவும் மாநாடாக அமையும்.


அதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள், பாமக நிறுவனர் ராமதாஸ், நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் யார் மனதும் புண்படக்கூடாது என நினைப்பவன் என்று கூறினார்.


தேசிய ஜனநாயக கூட்டணி வடிவம் பெறவில்லை என்ற திருமாவளவனின் கருத்து குறித்த கேள்விக்கு, "திமுக கூட்டணி சரியான வடிவம் பெற்றுள்ளதா என்பதே சந்தேகம். காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும், திமுக அமைச்சர்களும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருக்கிறதா என்பதே தெரியவில்லை. தேர்தல் அறிக்கையை கூட முழுமையாக நிறைவேற்ற முடியாத ஆட்சி. ஒரு டிஜிபியை கூட இதுவரை நியமிக்க முடிவில்லை. இந்த அரசு எப்படி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும். 33 லாக் அப் மரணங்கள் நிகழந்து இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க செல்லும் பெண்களையும் ஜாதி ரீதியாக திட்டுகின்றனர். ஒரு போலீஸ்காரர் பெண் அதிகாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார் என்றார்.


பாஜக தொடர்பான விஜயின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "விஜய்க்கு ஏதாவது கொள்கை இருக்கிறதா? கொள்கை என பேப்பரில் எழுதி வைத்திருப்பவர்களுக்கு என்ன சொல்ல முடியும்? கரூரில் உயிரிழப்புக்கு விஜயும், அரசும் தான் காரணம்.


விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் உயிரிழப்பு ஏற்படுகிறது. நல்ல சகுனம்தான் அவர்களுக்கு" என்றார்.


தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்த கேள்விக்கு, "1ம் தேதி பாருங்கள்" என பதிலளித்தார்.


எங்கள் அண்ணன் இபிஎஸ் மற்றும் பல கூட்டணி கட்சிகளால் பாஜக பலமாக உள்ளது. இபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மலரும்.


இவ்வாறு அவர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%