16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: கோவா அரசு பரிசீலனை

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: கோவா அரசு பரிசீலனை


 

பனாஜி: ஆஸ்திரேலியாவைப் போல் கோவாவிலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து அம்மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது.



பேஸ்புக், எக்ஸ், வாட்ஸாப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த ஆஸ்திரேலியா சமீபத்தில் தடை விதித்தது. புதிதாக யாரும் கணக்கு துவங்க முடியாது என்றும், பயன்பாட்டில் உள்ள கணக்குகள் நீக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்து இருந்தது. தடையை மீறிம் நிறுவனங்களுக்கு அங்கு 3 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.



சென்னை உயர்நீதி மன்றமும், இதுபோன்ற தடைகளை இந்தியாவில் அமல்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆந்திராவிலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்து இருந்தார்.



இதனையடுத்து ஆஸ்திரலேியாவை பின்பற்றி, கோவாவிலும் சமூக ஊடகங்களை பயன்படுத்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது.



இது தொடர்பாக அம்மாநிலஅமைச்சர் ராகுன் கவுன்டே கூறியதாவது: சாத்தியம் இருந்தால் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும். விபரங்கள் பிறகு தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.



இது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%