news Breaking News
clock

2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு பணி தீவிரம்

2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு பணி தீவிரம்



மதுரை, ஜன.

- 2026 சட்டமன்றத் தேர்தலை முன் னிட்டு, மதுரை மாவட்டத்தில் மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு கருவி குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை முன்னிட்டு, முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந் துள்ளன. இதனைத் தொடர்ந்து, பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நோக்கில், 21.1.2026 அன்று அங்கீ கரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், 308 கட்டுப்பாட்டு கருவிகள், 308 வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் 308 வாக்காளர் சரிபார்ப்பு கருவிகள் அந்தந்த 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் மற்றும் கருவிகள் குறித்த விவரங்கள் மற் றும் பட்டியல்கள், அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங் கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வா கம் தெரிவித்துள்ளது. இந்திய தேர் தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் களின்படி, பயிற்சி மற்றும் விழிப்பு ணர்வு நோக்கில் குறிப்பிட்ட இடங்க ளில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள் ளன. மதுரை மாவட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திரு மங்கலம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய 10 சட்டமன்றத் தொகுதி களில், வட்டாட்சியர் அலுவலகங் கள், மாநகராட்சி மண்டல அலு வலகங்கள் மற்றும் தாலுகா அலு வலகங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல் முறை விளக்க மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 10 நடமாடும் செயல்முறை விளக்க வாகனங்கள் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும் முறை மற்றும் வாக் காளர் அளிக்கும் வாக்கு எவ்வாறு சரிபார்க்கப்படுகிறது என்பதையும் நேரடியாக விளக்கிக் காட்டப்படு கிறது. இந்த விழிப்புணர்வு நடவ டிக்கை, இந்திய தேர்தல் ஆணை யம் தேர்தல் அறிவிப்பு வெளி யிடும் வரை தொடர்ந்து நடை பெறும் என்றும், அதன் பின்னர் மின்னணு ஊடகங்கள் வாயிலாக மட்டுமே இப்பணிகள் மேற்கொள் ளப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News