news Breaking News
clock

பிரபந்த சர்ச்சை உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு

பிரபந்த சர்ச்சை உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு



காஞ்சிபுரம், ஜன.

- காஞ்சிபுரம் வரத ராஜ பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே 120 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் திவ்ய பிரபந்தம் பாடும் உரிமை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த பிரச்சனைக்கு அமைதியான முறை யில் தீர்வு காண முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களைப் பிரதான நடுவராக (மத்தியஸ்தர்) நீதிமன்றம் நியமித்துள்ளது. இக்கோயிலின் வழிபாடு மற்றும் உற்சவங்களின் போது பிரபந்தம் பாடுவதில் இரு தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வரும் நிலையில், இரு தரப்பு வழக்கறிஞர்களின் ஒப்புத லுடன் இந்த நடுவர் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்ததோடு, கோயில் சடங்குகளைத் தடையின்றி நடத்த இரு பிரிவினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியு றுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதி பதியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட நீதிபதி கவுல் மூலம் இந்த நீண்டகாலச் சர்ச்சைக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News