news Breaking News
clock

28-ம் நாளான செய்யாறு கலைஞர் சிலை அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி: எம்.பி., - எம்.எல்.ஏ., பங்கேற்பு !

28-ம் நாளான செய்யாறு கலைஞர் சிலை அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி: எம்.பி., - எம்.எல்.ஏ., பங்கேற்பு !


செய்யாறு, ஜன. 29 -

செய்யாறு கலைஞர் சிலை அருகே 28ம் நாளான நேற்று அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மதியழகன்

ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆகியோர் முன்னிலையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், நகர செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்களான ஜே.சி.கே.சீனுவாசன், ஞானவேல், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மாமண்டூர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து புரிசை சிவக்குமார், கிளைக் கழக செயலாளர்கள் விஜயன், கமலக்கண்ணன், அருள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், 

கவுன்சிலர்கள் கோவேந்தன், அண்ணாதுரை மற்றும் தி.மு.க., பொறுப்பாளர்களான சிவப்பிரகாசம், சூரிய பிரகாஷ், கோபு ஆகியோர் கலந்து கொண்டு, பொது மக்கள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News