news Breaking News
clock

பொங்கும் சூரியன்

பொங்கும் சூரியன்


அறுசீர் மண்டிலம்.


காலையில் தோன்றும்

சூரியன்

காட்டுமே தம்மின்

வீரியம்!

கோலமே போடும்

போதிலே

கூடியே வருமே

ஆதவன்!

பாலமாய் மாந்தர்

வாழ்விலே

பாங்குடன் ஒளிர்வான்

சூழ்ந்திட!

மாலையில் மறைவான்

மலையிலே

மாண்புடன் நிறைவான்

கலையென!


நெருப்புடைக் கோளம்

சூரியன்

நேர்ந்தநல் ஒளியின்

ஆதவன்!

பரிதியே என்றும்

சொல்வமே

பாங்குடன் விளங்கும்

கதிரவன்!

பெரியதாய்த் தோன்றும்

பரிதியே

புவியினும் பெரிதாம்

சூரியன்!

பரிவுடன் உலகைக்

காக்குமே

பாங்குடன் உயிரைப்

பார்க்குமே!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News