40 ஆண்டுகளில் இல்லாத வகையில் உலகளவில் ஜனநாயகம் வீழ்ச்சி

40 ஆண்டுகளில் இல்லாத வகையில் உலகளவில் ஜனநாயகம் வீழ்ச்சி



வாஷிங்டன்,பிப்.

- கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலகம் முழுவதும் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருகிறது என ‘ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்’ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவை ஒரு சர்வாதிகார நாடாக மாற்றி வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. வாஷிங்டன் நகரை தலைமை இடமாகக் கொண்ட அமெரிக்காவுக்கு ஆதரவாக இயங்கி வருகின்ற மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான ‘ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்’ தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மனித உரிமைகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்துப் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களைப் பகிர்ந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சட்ட விதிக ளின் அடிப்படையில் இயங்கும் சர்வதேச ஒழுங்கு முறை தற்போது நசுக்கப்பட்டு வருகிறது. டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப் பேற்ற பிறகு ஒரு உலகளவில் மனித உரிமைகள் ஆபத்தான சரிவைச் சந்தித்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே மனித உரிமைகளை மதிக்காமல் தொடர்ந்து அப்பட்டமான மீறல்க ளில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, போதிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் குடியிருக் கும் வெளி நாட்டினரை கைது செய்ய, முகமூடி அணிந்து கொண்டு ஆயுதம் ஏந்தி வரும் இமிக்ரே ஷன் மற்றும் கஸ்டம்ஸ் என்போர்ஸ்மென்ட் (ICE) குழுவினரால் நூற்றுக்கணக்கான வன் முறைகள் அரங்கேற்றப்படுகின்றன. சர்வாதிகாரத்தை நோக்கி அமெரிக்கா இனம் மற்றும் இன ரீதியான மக்களைப் பலிகடா ஆக்குவது. அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் தேசிய பாதுகாப்புப் படையினரை (National Guard) உள்நாட்டில் நிலைநிறுத்துவது. அரசியல் எதிரிகள் மற்றும் தன்னை விமர்சிக் கும் முன்னாள் அதிகாரிகள் மீது பழிவாங்கும் நட வடிக்கைகளை எடுப்பது. ஜனநாயக ரீதியான செக் அண்ட் பேலன்ஸ் (Checks and balances) முறையைச் சிதைத்து, நிர்வாக அதிகாரத்தைத் தன்னிச்சையாக விரி வாக்க முயல்வது. இவை அனைத்தும் அமெரிக்கா சர்வாதிகா ரத்தை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்துகின்றன என அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேசச் சட்டத்தின்படி குற்றமாகக் கருதப் படும் “கட்டாயமாக காணாமல் ஆக்குதல்” (Enforced disappearances) என்ற செயலில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என்பதனை மீண்டும் ஒருமுறை அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 252 வெனிசுலா புலம்பெயர்ந்தோரை எல்சால் வடாரில் உள்ள ஒரு சிறைக்கு அனுப்பிய சம்பவத்தை இதற்கு உதாரணமாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%