40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்...

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்...



1. அகத்திக்கீரை - இரத்தத்தை சுத்தமாக்கிபித்தத்தை தெளியவைக்கும்.


2. காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.


3. சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.


4. பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.


5. கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.


6. மஞ்சள்கரிசலை கல்லீரலை பலமாக்கும். காமாலையை விலக்கும்.


7. குப்பைகீரை பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.


8. அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.


9. புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.


10. பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.


11. பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.


12. பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.


13. சுக்கா கீரை - இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.


14. வெள்ளை கரிசலைக்கீரை - இரத்தசோகையை நீக்கும்.


15. முரங்கைக்கீரை -நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.


16. வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.


17. முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும்


வாயு விலகும்.


18. புண்ணக்கீரை - சிரங்கும். சீதளமும் விலக்கும்.


19. புதினாக்கீரை - இரத்தத்தை சுத்தம் செய்யும்,


அஜீரணத்தை போக்கும்.


20. நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.


21. தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.


22. முருங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.


23. முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.


24. பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை


தணிக்கும்.


25. புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.


26. மணலிக்கீரை- வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.


27. மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண்


குணமாக்கும். தேமல் போக்கும்.


28. முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.


29. சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.


30. 31. வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காசநோய்களை விலக்கும்.


32. தூதுவலை-ஆண்மை தரும். சருமநோயைவிலக்கும்.


சளித்தொல்லை நீக்கும்.


33. தவசிக்கீரை - இருமலை போக்கும்.


34. சாணக்கீரை - காயம் ஆற்றும்.


35. வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.


36. விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.


37. கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.


38. துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.


39. துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.


40. காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும்


*லால்குடி வெ நாராயணன்*


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%