tamilnadu epaper

வாசகர் கடிதம் (அபிபுல்லாகான். க)-22.05.25

வாசகர் கடிதம் (அபிபுல்லாகான். க)-22.05.25


 தமிழகத்திற்கான நிதியை போராடி பெறுவேன் , முதலமைச்சர் காட்டமான பதில்.

 பெண்கள் பணி புரியும் அலுவலர்களில் விசாகா கமிட்டி அமைக்காதது ஏன் எடப்பாடி பழனிசாமி வினா.

 துணைவேந்தர்கள் நியமனம் தமிழக அரசுக்கு இடைக்கால தடை.

 கிருஷ்ணா நதிநீரை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

 திருவண்ணாமலை யில் 1434 ஆம் பசலி ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது மாண்புமிகு துணை சபாநாயகர் பிச்சாண்டி வருவாய் தீர்வாய் அலுவலர் சிவா தாசில்தார் ஜான் பாஷா சுகுணா மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆறுமுகம் ராஜேந்திரன் பேரூராட்சி தலைவர் சரவணன் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

 குமரி மாவட்டம் முதல்வர் மருந்தகத்தினை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

 பெரம்பலூர் அருகே குலதெய்வத்திற்கு 500 ஆடு பலியிட்டு விருந்து.

 குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

 திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் உற்சவ விழாவில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு தங்க நாதஸ்வரம் இசைக்கப்பட்டது.

 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கீழ் மாம்பட்டு அம்மச்சார் கோவில் விழாவில் பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

 மத்திய நீதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கனிமொழி எம்பி சந்தித்து செங்கலுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்க கோரி மனு கொடுத்தார்.

 அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்ற ராபேல்லோ சிகிச்சை அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை பார்வதி நாயர் கலந்து கொண்டார்.

 கோவை வன எல்லையில் பிளாசிக்கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க வானதி சீனிவாசன் கோரிக்கை.

 மதுரை மாநகராட்சி வாகனங்கள் பராமரிப்பு அலட்சியம் உதவி பொறியாளர் சஸ்பெண்ட்.

 நகை கடன் நிபந்தனைகளால் உழைக்கும் மக்களின் கடன் பெறும் உரிமை பறிப்பு முத்தரசன் அறிக்கை.

 சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து.

 கோவை மருதமலை வனப்பகுதியில் பலியான யானையின் வயிற்றில் ஆண் குட்டியானை.

 அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 ஈரோடு கடத்தல் வழக்கில் விடுதலையாகி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜ்.

 பரங்கிமலை ஓசூர் திருவண்ணாமலை ஆகிய மூன்று இடங்களில் மகளிர் விடுதிகளை முதல்வர் திறந்து வைத்தார்.

 எதிர்க்கட்சிகளின் விபச்சங்களோடு தான் 10 தேர்தலில் வென்றிருக்கிறோம்k. N நேரு பேட்டி.

 வேலூர் மின்கம்பத்தில் ஏறிய கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

 ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ஈட்டியறுதல் வீரன்.

 போக்குவரத்து கழக ஊழியர்கள் தமிழகத்தில் மே 27 இல் உண்ணாவிரதம்.

 கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் சீமான் வேண்டுகோள்.

 பயணங்கள் முடிவதில்லை அமெரிக்கா பயணம் சேலம் விஜி சம்பத்தின் கட்டுரை அருமையாக உள்ளது.

 குளுகுளு குல்பி பிரபா பிரபாவதியின் ரெசிபி நன்றாக உள்ளது.

 மீம்ஸ் ஜோக்ஸ் அருமை அருமை.

 வாங்க சம்பாதிக்கலாம் வியாபாரம் மற்றும் தொழில் செய்ய வாஸ்து முறைகள் 24 மணி நேரமும் பால் வழங்கும் மில்க் ஏடிஎம் இயந்திரம் பென் ஆயில் தயாரிப்பது எப்படி.

 தமிழகத்தில் அடுத்த இந்தியா கூட்டணி ஆட்சி தான் செல்வப் பெருந்தகை திட்டவட்டம்.

 வலங்கைமானில் ராஜீவ் காந்தியின் 34ஆம் ஆண்டு நினைவு தினம் காங்கிரஸ் தொழிற்சங்கம் ஐஎன்டிசி சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

 குமரி மாவட்டம் கிடங்கன் கரை விலை முத்தீஸ்வரர் கோவில் திருவிழாவில் பிஸ்கட் சாக்லேட் மிட்டாய்களால் கட்டிய மாலையை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றிய வளர்ச்சி ஊராட்சியில் வணிகவரி மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பணியை துவக்கி வைத்தார் உடன் சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் மாவட்ட கவுன்சிலர் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 ஜூன் 1ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் மதுரை ஊத்தங்குடியில் நடைபெற உள்ளது நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏவா வேலு பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

 திருவண்ணாமலை மாவட்ட பள்ளி பேருந்துகளை கலெக்டர் தர்மராஜ் ஆய்வு செய்தார்.

 பொன்னமராவதியின் வளர்ச்சி பணிகளை அதிகரித்து தரக் கோரி அமைச்சர்களிடம் திமுக நகரச் செயலாளர் அழகப்பன் கோரிக்கை.

 வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் ரூபாய் 25 லட்சம் உண்டியல் காணிக்கை.

 நாடு முழுவதும் 103 அம்பிகா பாரத் ரயில் நிலையங்கள் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

 ஜல்ஜீவன் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய 100 குழுக்களை அனுப்ப மத்திய அரசு முடிவு.

 பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவு தகவல் கிடைத்தது கார்கோ தகவல்.

 ஏழு மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த இளம் பெண் போலீசாரிடம் சிக்கினார்.

 பலாத்காரம் செய்யப்பட்ட இரண்டரை வயது சிறுமி உயிர் இழப்பு தாயின் காதலன் கைது.

 தலையில் கல்லைப் போட்டு பெண் கொலை குழந்தை இல்லாததால் கணவன் உள்பட மூணு பேர் வெறிச்செயல்.

 உளவுத்துறை இயக்குனர் தபன்குமார் டேகா பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிப்பு.

 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதி மன்றங்கள் தலையிடுவது இல்லை தலைமை நீதிபதி கவாய் கருத்து.

 கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு மின்சாரம் தாக்கியும் சுவரிடிந்தும் மூணு பேர் உயிரிழப்பு.

 பகல் காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சுற்றுலாவை மேம்படுத்துவது பற்றி பிரதமர் தலைமையில் ஆலோசனை.

 பாகிஸ்தான் ராணுவ தளபதி ஹசிம் முனீருக்கு மார்ஷல் பதவி.

 உக்கிரனுக்கு எதிரான போரை நிறுத்த தயார் அமெரிக்கா அதிபர் ட்ராமுடன் பேசிய ரஷ்ய அதிபர் புதின் தகவல்.

 ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை இந்தியாவில் 257 பேர் பாதிப்பு.

 அமைதிப் பேச்சாளத்தை தடைபட்டால் ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.

 வீட்டிலிருந்து மர்மமான முறையில் கீழ விழுந்த லஷ்கர் பயங்கரவாதி தீவிர சிகிச்சை.

 இன்றைய புதுக்கவிதை கவிதைகள் அனைத்தும் அருமை.

 இந்த காலை வேலை குறித்த நேரத்தில் கிடைக்க பாடுபட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி நன்றி.



அபிபுல்லாகான். க

போளூர்