tamilnadu epaper

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-23.05.25

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-23.05.25


தமிழ்நாடு இ பேப்பரின் சக்தி வல்லமை தரும் 

சத்சங்ம் என்று சொன்னால் கன கச்சிதமாக பொருந்தும்.

தேனீக்களின் அயரா உழைப்பால் காமதேனு 

மாதிரி உன்னதமான 

உலகத் தகவல்களை யெல்லாம் நித்தம் நித்தம் வாரி வாரி வழங்கி வரும் நேர்த்தியால் 28 லட்சத்துக்கும் மேலான வாசக சொந்தங்களை 

இன்று தமிழ் நாடு இ பேப்பர் அசைக்க முடியாத சொத்தாகக் கொண்டு அதி வேகமாக முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதை,

ஆழ்ந்தகன்ற பார்வையில் உற்று நோக்கி உணர்ந்தால் சத்சங்ம் என்று நாம் குறிப்பிட்டதன் உள் அர்த்த உண்மை புரியும். 


மாக்ஸிம் கார்க்கி என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்...

ஒரு நாள் நண்பருடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

'இந்த உலகத்திலே புனிதமானது எது தெரியுமா?' என்று 

நண்பரிடம் கேட்கிறார்.


"தாய்" என்கிறார் நண்பர்.


இல்லை என்று தலை அசைத்தார் கார்க்கி.


"தந்தை..."


"இல்லை... இல்லை "


" குடும்பம்"


" இல்லை... இல்லை"


" நண்பன்"


" இல்லை... இல்லை"


" தர்மம்"


" இல்லை... இல்லை"


" மனசாட்சி"


" இல்லை... இல்லை... இல்லை..."


இப்படி நண்பர் சொல்வதை யெல்லாம் இல்லை இல்லை என்று மறுத்து 

விடுகிறார் எழுத்தாளர்.

ஒரு கட்டத்தில் நண்பர் சற்று மனம் தளர்ந்து போய், " அப்படின்னா பதிலை நீங்களே சொல்லி விடுங்கள் அய்யா" என்று சரண்டர் ஆகி விடுகிறார். உடனே மாக்ஸிம் சிரித்தவாறே 

தலை தாழ்த்தி கொண்டு சொன்னார்:


" இந்த உலகிலேயே புனிதமானது எது தெரியுமா? தன் இருப்பின் மீது திருப்தி அடையாத மனிதன், 

தன்னை மேம்படுத்திக் கொள்வதற்காக --

தன்னை சீர் படுத்திக் கொள்வதற்காக தன்னை பக்குவப் படுத்திக் கொள்வதற்காக -- தன்னைப் பண் படுத்திக் கொள்வதற்காக செய்கின்ற முயற்சி இருக்கிறதே... அது தான் இந்த உலகிலேயே புனிதமானது என்றாராம்.


இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், வாசகப் பெரு மக்கள் அறிவாலும் ஆற்றலாலும் அன்பாலும் உயர்ந்து உன்னதத்தைப் பெற்றுத் திகழ வேண்டும் என்பதை அடிநாதமாகக் கொண்டு பெறற்கரிய கருத்து செல்வங்களை 

அள்ளி அள்ளி வழங்கி வரும் தமிழ் நாடு இ பேப்பரின் மகதாதான பணி, தூய மனித நேயப் பணி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி சொன்னது போல, உலகில் தன் தரத்தை மேம்படுத்திக் கொள்வது தான் ஒரு தனி மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று! அத்தகைய புனிதத் தன்மையை வாசக சொந்தங்கள் அனைவரும் அடைகின்ற வகையில் 

வழி நடத்திச் செல்கின்ற தமிழ் நாடு இ பேப்பரின் முக்கியத்துவத்தை தமிழ் கூறு நல்லுலகம் பூரணமாக புரிந்து கொள்ள வேண்டும்!

புரிந்து உள் வாங்கும் போது தான் பயணத்தின் மகத்துவம் துல்லிய வெளிச்சம் பெறும்.

விழித்து நீ ஏழுந்தால் விலங்குகளே நொறுங்கும்...

சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப் படுத்தி வைப்பது '

என்று வைர வரிகளால் புத்துணர்ச்சி ஊட்டும் 

மகா கவிஞர் மு.மேத்தாவை எளிதில் மறக்க முடியுமா என்ன...

சோம்பல் சுகத்தில் சிக்குண்டு, இந்த சமூகத்துக்குப் பெரும் பாரமாக விளங்கும் 

வலிமை குன்றிய பலவீன மனம் படைத்தோர் எல்லாம்

வீறு கொண்டெழுந்து 

வெற்றிக்கான விலாசத்தை வசப்படுத்தும் காலம் கனிந்திருக்கிறது.

வளமார்ந்த இதயத்தின் துணை கொண்டு நம்மை நாமே முழுமையாக அறிந்து ஆற்றல் பெருக்கி அரியாசனம் ஏறி ஆனந்த வாழ்வை மேற்கொள்ளும் நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத் தான் சுற்றி வளைத்துப் பேசி, மனம் சுத்தப்படுத்தும் 

மனம் சூப்பர் சக்தியை 

பெறும் சூட்சுமத்தை 

வித்யாசமான வழியில் 

வெளிச்சப் படுத்துகிறோம்.

நூலறிவுக்கும் 

வாலறிவுக்கும் 

மிகவும் சொந்தமாகிப் போன தமிழ் நாடு இ பேப்பரின் வாசக சொந்தங்கள் பத்தோடு பதினொன்றாகி விடாமல் திட சிந்தனையும் தெளிந்த நம்பிக்கையும் தூய அன்பும் நிரம்பப் பெற்று இந்தப் பூவுலகில் செழித்து ஜொலிப்பார்களாக...

எல்லாம் வல்ல இறைவனை வணங்கி 

இதை சமர்ப்பிக்கும் போது ஜெயம் கிட்டாமல் போகுமோ?

தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினரின் ஆக்கப் பூர்வமான முயற்சிகளால் மேலும் மேலும் நூலறிவையும் வாலறிவையும் அதிநுட்ப வெளிச்சத்தில் மேலோங்கச் செய்திடுவோம்.

மங்காப் புகழ் பெற்றிடுவோம்.

 இந்த மண்ணில் வானகம் தென்படும் 

வளர்ச்சியை நாம் எட்டிடுவோம்.

தமிழ்நாடு இ பேப்பரின் வாசக சொந்தங்கள் ஒரு கோடிக்கு மேல் என்ற இலக்கினை விரைவில் தொட்டுத் தெளிந்திடுவோம்.

We Can...because We think we Can...



நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்