சாய சேலக்காரி சமைஞ்ச பெண்ணே வாடி அத்தை மகன் அழைக்கிறேன் மதுர மல்லி வாசம் மயக்குதடி கண்ணே
என்னம்மா உன் அம்மாவும் ஒப்பந்தம் அவர்கள் திரு மணத்தில் செய்தனர் அந்த ஒப்பந்தப்படி வாழ்வோம்
வாழ்வோமா என் தேனே மான் விழியாலே நாம் மணம் செய்து மக்களைப் பெற்று மகராசராய் நாம் வாழலாம் பிள்ளையைப்
பெற்று பெருவாழ்வு வாழலாம்
சொல்லடி கண்ணே சொல்லு நமக்குவசந்த காலம் வருகிறது சோழவள நாட்டில் வாழலாம்
கல்லணையை கட்டினான் கரிகால பெரு வளத்தான்
புஞ்சையை நஞ்சையாக்கி வளமாக நலமாக வாழ்கிறோம்
கொள்ளிடத்தில் பாய்ச்சலில் தான் செந்நெல்லும் கரும்பும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் கமுகும் தென்னையும் இங்கு
விளையும் பாட்டனும் பூட்டனும் பல வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தார்கள் பெருவளத்தான் மன்னன் வாழ வைத்தான்
இயற்கை வழி வேளாண்மை பரவுகிறது தஞ்சையில் நஞ்சிலா உணவு உடை உறைவிடம் நஞ்சிலா பஞ்சபூதங்களும்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாக அத்தையின் மகனும் மாமனின் மகளும் மணந்து உறவு பிரியாமல் வாழலாம்
உற்றார் உறவினர்கள் இனம் சன பந்துகள் வழக்க பழக்க பண்பாடுடன் அரை லட்சம் ஆண்டுகள் வாழ்க வரலாறு
மொழி வரலாறு உடன் நமக்கு உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் குறளுக்கு ஒப்ப விருந்தோம்பலுடன் வாழலாம்
உலகு அடிமை வேலை நமக்கு வேண்டாம் நாமே உலகத்துக்கு அச்சாணி உழவை நம்பியே உலகு தமிழர்களாய் வாழலாம் வாரீர் வாரீர்
பேராசிரியர் முனைவர் வேலாயுதம் பெரியசாமி சேலம்