tamilnadu epaper

வதை

வதை


நீ என்ன செய்துகொண்டிருப்பாய் இதேவேளை

ஒரு தேனீர்க்கோப்பையை ருசித்திருக்கலாம்

சூழ்ந்த உறவுகளோடு குதூகலித்திருக்கலாம்

இரவின் இருளைத்தேடி மையல் பூத்திருக்கலாம்

விழிநீர்தாங்கும் தலையணைக்கு ஏங்கியுமிருக்கலாம்

அன்றியும் அரவணைக்கும் கைகளில்

அனிச்சையாய் சிறைப்பட்டிருக்கலாம்..


நானிப்படி தனிமையில் பாரமாய்

தவித்திருப்பதை நீ உணர்ந்துமிருக்கலாம்..


ஒரு மழை என்னை கரைத்துவிடட்டும்

ஒரு தணல் என்னை எரித்துவிடட்டும்

ஒரு யுகம் கணமாய் சிதைந்துவிடட்டும்..


வாழ்தல் என்பது நீ அருகற்று நரகம்

உயிர் மீள்தல் என்பதும நிகழா கனவு..


ஏனடி என்னை இப்படி அணுவாய் சிதைக்கிறாய்

இருப்புக்கொள்ளாது எல்லாக்கணமும் வதைக்கிறாய்..!


-ம.முத்துககுமார்

வே.காளியாபுரம்