காரண காரியம்
தெரியாமல்தான்
நான் உன்னை அழைக்கிறேன்
காலங்கள்
கடந்தும்
உன் காதுகளில்
விழாத மெளன
ஓசையில்
நான் உனக்கு இல்லை
நீ எனக்கு வேண்டாம்
ஆனாலும்
நான்
உன்னை
அழைக்கிறேன்
எனக்கு மட்டுமே கேட்கும்
ஏதோ ஒரு மொழியில்
என் இதயம் விரும்பும் உன் காதலுக்காக மட்டும்....

-மனுசியபுத்திரியும் தேவனும்
கந்தர்வகோட்டை