கண்ணே கண்மணியே
என் கைபேசியே!
கையகலத்தில் தான் உன்னுருவம்
கடலலளவு விசயங்களை விரலசைவில் தருவாயே
அண்டசராசரம் முழுவதும் அலசி அறிந்தவள் நீ
காலநேரம் பார்க்காமல்
கவலை ஏதும் கொள்ளாமல்
உலகம் முழுவதும் சுற்றி வந்து காட்டுகிறாய்
விந்தையாய் உள்ளது சிந்தையை மயக்குது
இத்தனை அதிசயமா என்று அசந்து போகிறேன்
அரைநொடியில் அத்தனையும் அறிவிப்பு செய்கிறாய்
எழுத்துக்களை தட்டுகிறேன் எத்தனை விளக்கங்கள் தருகிறாய்
எண்களாலே இயங்குகிறாய் எண்ணமெலாம் நிறைந்திட்டாய்
பட்டனை தட்டினால் பாமரனுக்கும் உதவுகிறாய்
பிறந்த குழந்தைமுதல் கிழப்பருவம் உள்ளவரும்
விரும்பியே பார்க்கின்றார் கரும்பாக இனிக்கின்றாய்
சமயத்தில் தொடர்பு எல்லைக்குப் போய்
சோதனை செய்கிறாய்
டாப்பப் செய்யாவிட்டால் தட்டினாலும் தூங்கிடுவாய்
ப்ரீபெய்டு போஸ்ட்பெய்டு எதுவானாலும் உன்னை
விரும்பாத, நீ இல்லாத
வீடுகள் தான் உண்டோ?
அறிவியலோ ஆன்மீகமோ, கணிதமோ பூகோளமோ
கைக்குள் அடங்கும் கைபேசியே என் கண்ணே!
உயிர் துறந்தாலும் உனை துறவேன் நான்!
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்