ஏழையின் வீட்டிலோர் முருங்கை மரம்--அவன் எழுந்ததும் உண்ணும்நீ ராகாரம்
கோழையை போக்கும் துளசியென-- நம் குருபரர் சிவந்தி ஆதித்தனார்!
குடிசைக் குள்ளே மண்தரையில்-- சிறு
கிராமம்,தேநீர் கடைகளிளும்
அடுக்கு மாடி அறைகளிலும் --எங்கும் அவர்தம் நாளிதழ் அணி வகுக்கும்!
இதழியல் வானிலோர் ஆதவனாம்-- தமிழ் எழுத்தறி வித்தஆ சாரியனாம்
பொதுநல சேவைகள் அளப்பரிய-- செய்தும்
புகழை விரும்பாத் தமிழ் மகனாம்!
இலக்கிய தோப்பிலோர் ஆலமரம்--- அவர்
இறையடி சேர்ந்ததை நாளும் நினை--அவர் இலக்கினை நோக்கிப் பயணம் செய்தால் --அந்த இனியவர் ஆன்மா சாந்தி பெறும்.!!
-குடந்தை பரிபூரணன்.