tamilnadu epaper

பாதுகாப்பு விதிகள்

பாதுகாப்பு விதிகள்


விபத்து மரணங்கள்

விபரீத அவலங்கள்

விலை கொடுத்து

வாங்கும் வேதனைகள்!


சாலை விதிகளை

முறையாகக் கையாள

பயணம் எளிதாகும்

பாதுகாப்பு தெளிவாகும்!


எச்சரிக்கைப் பலகைகளை

கவனமாய்ப் பேணிட

எமனுக்கு வேலையில்லை

எவருக்கும் சோகமில்லை!


விதியினை வென்றிட

விழிப்புணர்வே கவசம்

வாழ்க்கைப் பயணத்திற்கு

விதிமுறைகளே கேடயம்!



-முகில் தினகரன்,

கோயமுத்தூர்