விதைகள் உறங்கிவிட்டால்
விருட்சங்கள்
எழலாகுமா
கதிரவன்
உறங்கிவிட்டால்
காலமாற்றம்
நிகழுமா
காற்றது
உறங்கிவிட்டால்
உயிர்கள்
உழலுமா
கடலது
உறங்கிவிட்டால்
மேகங்கள்
கூடுமா
வார்த்தைகள்
உறங்கிவிட்டால்
கவிதைதான்
பிறக்குமா
மனமது
உறங்கிவிட்டால்
எழுச்சிதான்
இருக்குமா
வெற்றிகள்
உறங்கிவிட்டால்
முயற்சிகள்
விழிக்குமா
முயற்சிகள்
உறங்கிவிட்டால்
முன்னேற்றம்
கிடைக்குமா
இளையதலைமுறை
உறங்கிவிட்டால்
தேசம் தான்
நிலைபெறுமா
உறக்கம்
புலன்களுக்கான
மலர்ச்சியே அன்றி
தளர்ச்சி அல்ல.
மானுடமே!
உறங்கியே
வாழ்வைக் கழிக்காமல்
உதாரணமாய்
வாழ்ந்திட வழிகளை
செப்பனிடுவோமா....
கவிஞர் மு.வா.பாலாஜி
ஓசூர்