tamilnadu epaper

மூப்பு

மூப்பு


மூப்பு என்பது 

இளையோருக்கு

கொடுப்பதற்கான 

காப்பு!


மூப்பு என்பது 

முழுதும் பால் 

நிறைந்த முற்றிய 

நெல் மணி! 


மூப்பு என்பது 

அனுபவங்களின் 

அடையாளக் குறி!


மூப்பு என்பது 

நடமாடும் 

பல்கலைக்கழகம்! 


மூப்பு என்பது 

வாய்திறந்து பேசும் 

நூல் நிலையம்! 


மூப்பு என்பது 

நாம் தொட்டு வணங்கும் 

தூரத்தில் உள்ள தெய்வங்கள் 

உறையும் கருவறை!


மூப்பு என்பது 

வாழ்ந்த வாழ்க்கையின்

சேமிப்பு கலன்! 


மூப்பு என்பது 

நன்கு விளைந்து 

அறுவடை முடிந்த 

விளைநிலம்! 


மூப்பு என்பது 

இளமை வந்து 

விசாரணை நடத்தும் 

வழிகாட்டி! 


முதுமை என்பது 

இன்னலில் உள்ளோர் 

தன்துன்பம் இறக்கிவைக்க

உதவும் சுமைதாங்கி! 


மூப்பு என்பது 

இளமையை உருக்கி 

இளகிபழுத்த பழம்! 


மூப்பு என்பது 

யாரும் விரும்பி 

ஏற்காத வாழ்கை 

வேடம்! 


மூப்பு என்பது 

மூடிமறைக்க முடியாத 

உடல் முடிவின் 

முடிவுரை! 


மூப்பு என்பது 

புனல் கைவிட்ட 

ஆற்றின் கூழாங்கல்! 


மூப்பு என்பது 

வசந்த கால 

பிம்பங்கள் வந்தாடும் 

திரை வானம்! 


மூப்பு என்பது 

கசப்பாய் தெரியும் 

முடிவு காட்டும் 

கோடு! 


-புஷ்பா குமார் 

திருப்போரூர்